ஜம்பம் பலிக்காததால் கப் சிப்புன்னு வாலை சுருட்டிய ஜெய்லர் டீம்.. ரெட் ஜெயண்ட்டயே அல்லு தெறிக்கவிட்ட ஆபீஸர்

Jailer Team: பல எதிர்பார்ப்புகளை உள்ளடக்கி நெல்சன் தயாரிப்பில் உருவாகிய படம் தான் ஜெயிலர் . இப்படம் வெளிவருவதற்குள் ஏகப்பட்ட சர்ச்சையை உண்டாக்கி வரும் நிலையில், தற்பொழுது புதுதாய் வெளிவந்த தகவல் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைவரின் 169 வது படமான ஜெயிலர் படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் வழங்குகிறது. இப்படத்தில் ரஜினி, மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்கள்.

இப்படம் வரும் 10ம் தேதி திரைக்கு வெளிவர உள்ள நிலையில், இதனின் ஆடியோ லாஞ்சில் கலந்து கொண்டு பேசிய  ரஜினியை பெருமைப்படுத்தி இந்த வயதிலும் தயாரிப்பாளர்களை தன் பக்கம் இழுக்கும் தன்மை கொண்டவர் ரஜினி என கூறியுள்ளார்.

அதை தொடர்ந்து சில பிரச்சனைகளை சந்தித்து வரும் ஜெயிலர் டீமுக்கு தற்பொழுது புது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இப்படம் தலைவரின் படம் என்பதால் 10ம் தேதியை தீபாவளி என ரஜினி ரசிகர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றனர். எல்லா படத்தையும் போலவும் இப்படத்தின் சிறப்பு காட்சிகள் அதிகாலையில் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இவை ஸ்ட்ரைட் ஆக 9 மணிக்கு தான் படம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்பட்டதனை குறித்து ரசிகர்கள் ஆதிருப்தியில் இருந்து வருகின்றனர். மேலும் இதை குறித்து ரெட் ஜெயண்ட் போர் கொடி தூக்கியது. எப்படியாவது அனுமதி வாங்கி விட வேண்டும் என உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் இடம் சென்று இருக்கிறார்கள்.

ஆனால் இவர்களின் முயற்சி பயனளிக்கவில்லை. அவர் ஏற்கனவே பெரிய ஸ்ட்ரீட் ஆபிஸர் என்பதால் அனுமதி எல்லாம் கொடுக்க முடியாது. இப்படி அனுமதி கொடுத்து தான் உயிர் பலி வரை எடுத்துக் கொண்டு போய் விட்டு விட்டீர்கள் என சொல்லி விரட்டி அடித்து விட்டாராம்.