விஜய்யை பின்னுக்கு தள்ளிய கடைசி 3 படங்கள்.. வினோத்தால் எகிறிய அஜித்தின் மார்க்கெட்

கோலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டிருந்தார். டாப் நடிகர்களின் இவருடைய படம் தான் அதிக வசூல் செய்து கொண்டிருந்தது. அதனால் தான் விஜய்க்கு இப்போது ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 100 கோடியை தாண்டி சம்பளம் கொடுக்கப்படுகிறது.

ஆனால் அவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான மூன்று படங்கள் பெரிய அளவில் சொதப்பி உள்ளது. மேலும் அவருடைய கிராப் அப்படியே சரிவை சந்தித்திருக்கிறது. அதாவது விஜய், லோகேஷ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படம் 180 கோடி வசூல் செய்திருந்தது.

இதற்கு அடுத்ததாக நெல்சன், விஜய் கூட்டணியில் உருவான படம் தான் பீஸ்ட். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் 170 கோடி மட்டுமே வசூல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் தெலுங்கு இயக்குனரை நம்பி விஜய் நடித்த படம் தான் வாரிசு. இப்படம் 300 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியாகிறது.

ஆனால் வாரிசு படம் மொத்தமாக 155 கோடி தான் வசூல் செய்திருக்கும் என பலர் கூறி வருகிறார்கள். இந்நிலையில் விஜய்யின் ஒவ்வொரு படத்தின் வசூல் குறைந்து கொண்டே போகிறது. ஆனால் அஜித்தின் ஒவ்வொரு படத்தின் வசூலும் அதிகபடியாக உயர்ந்துள்ளது. அதாவது வினோத்துடன் அஜித் சென்ற நேரம் நல்ல நேரமாக அமைந்துள்ளது.

அதன்படி வினோத், அஜித் கூட்டணியில் முதல் முறையாக வெளியான நேர்கொண்ட பார்வை படம் 190 கோடி வசூல் செய்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக இதே கூட்டணியில் வெளியான படம் தான் வலிமை. ஆரம்பத்தில் இப்படத்திற்கு மோசமான விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூலை பொருத்தவரையில் 230 கோடி வசூலித்துள்ளது.

கடைசியாக விஜய்யின் வாரிசு படத்துக்கு போட்டியாக அஜித்தின் துணிவு படம் வெளியானது. இப்படம் கிட்டத்தட்ட 350 கோடியை தாண்டி உலகம் முழுவதும் வசூல் செய்திருந்தது. இவ்வாறு விஜய் ஒரு பக்கம் வீழ்ச்சியும், அஜித் ஒரு பக்கம் ஏற்றமும் அடைந்து வருகிறார். ஆனால் லோகேஷ், விஜய் மீண்டும் இணைந்துள்ளதால் லியோ படம் கண்டிப்பாக வசூலில் சாதனை படைக்கும் என நம்புகிறார்கள்.