33 வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் இயக்குனர்.. தலைவர் பிறந்தநாளில் வரப்போகும் அப்டேட்

Rajinikanth: ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ரஜினி வேட்டையன், கூலி என பிசியாகிவிட்டார். அதில் வேட்டையன் வரும் பத்தாம் தேதி திரையரங்குகளை அலங்கரிக்க உள்ளது.

அதேசமயம் லோகேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் உடல் நல பிரச்சனையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூப்பர் ஸ்டார் தற்போது வீடு திரும்பி உள்ளார்.

விரைவில் அவர் படப்பிடிப்பில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு பிறகு அவருடைய அடுத்த படம் என்ன என்ற கேள்வியும் நீண்ட நாட்களாக இருக்கிறது. அதில் மாரி செல்வராஜ் இயக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் இவரா.?

ஆனால் இப்போது வேறு ஒரு கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி 33 வருடங்களுக்கு பிறகு ரஜினியை இயக்க இருக்கிறார் மணிரத்னம். இவர்களுடைய கூட்டணியில் வெளிவந்த தளபதி இப்போதும் ரசிகர்களின் ஃபேவரைட் படமாக உள்ளது.

மணிரத்னம் தற்போது கமலை வைத்து தக் லைஃப் படத்தை எடுத்து வருகிறார். அதன் பிறகு சூப்பர் ஸ்டாரை அவர் இயக்க இருக்கிறார். இதன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகும் என உறுதியான தகவல்கள் வந்துள்ளது.

இதுதான் இப்போது ரசிகர்களை சந்தோஷத்தில் திக்கு முக்காட வைத்திருக்கிறது. இரண்டு லெஜன்ட் மீண்டும் இணைந்திருப்பது நிச்சயம் வேற லெவல் சர்ப்ரைஸ் தான். அந்த வகையில் இது தளபதி 2வாக இருக்குமா என்ற கேள்வியும் இப்போது முளைத்துள்ளது.

Leave a Comment