லெஜெண்ட் அண்ணாச்சியின் தீபாவளி விருந்து.. கங்குவா போல் சூர்யாவின் கருப்பு பின் வாங்குமா.?

Suriya: சூர்யாவுக்கு மட்டும் எங்கிருந்து தான் பிரச்சனைகள் கிளம்புமோ தெரியவில்லை. கடந்த வருடம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட கங்குவா காற்று போன பலூன் போல் ஆனது.

அதிலும் சோலோவாக களம் இறங்க வேண்டும் என வேட்டையனுக்கு வழி விட்டு படம் வெளியானது. ஆனாலும் எந்த பிரயோஜனமும் இல்லை. சரி ரெட்ரோ படத்தை வைத்து கல்லா கட்டலாம் என்று பிளான் போட்டார்.

அங்கும் குறுக்க இந்த கௌசிக் வந்தா என டூரிஸ்ட் ஃபேமிலி வெளியாகி ஓவர் டேக் செய்தது. அதை அடுத்து சூர்யா ஆர் ஜே பாலாஜியின் கருப்பு படம் இறுதி கட்டத்தில் இருக்கிறது.

வரும் தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்களும் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த முறை குறுக்க வந்தது நம்ம லெஜெண்ட் அண்ணாச்சி.

லெஜெண்ட் அண்ணாச்சியின் தீபாவளி விருந்து

அவர் நடித்து வரும் படத்தின் இறுதி கட்ட வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த வருட தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம் என அவர் தற்போது செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

படம் திரில்லர் சஸ்பென்ஸ் ஆக்சன் என கலந்த கலவையாக இருக்கும். டைட்டிலும் மாசாக இருக்கும். இந்த வருடம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து தான் என அவர் திடீரென ஒரு அப்டேட் கொடுத்துள்ளார்.

உடனே ப்ளூ சட்டை மாறன் வேட்டையன் படத்துக்காக கங்குவா பின்வாங்கியது. இப்போது லெஜன்ட் அண்ணாச்சியின் படத்துக்காக கருப்பு பின் வாங்குமா அல்லது மோதுமா என நக்கலாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு சூர்யா ரசிகர்கள் காட்டமாக பதில் அளித்து வருகின்றனர். ஆனால் இணையவாசிகள் நம்ம ஓட்டு அண்ணாச்சிக்கு தான் என ஜாலி கமெண்ட் கொடுக்கின்றனர்.