இயக்குனர் பாலா- சூர்யா கூட்டணியில் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவான வணங்கான் படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 35 நாட்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து, ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக அந்த படம் அப்படியே டிராப் செய்யப்பட்டது.
ஆனால் இப்போது அந்த படத்தை நடிகர் அருண் விஜய்யை வைத்து பாலா இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மேலும் இதில் அருண் விஜய்யின் மிரட்டலான கெட்டப்பும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இந்த படத்தை பாலாவின் சொந்த தயாரிப்பாக உருவாகி வருகிறது. இந்நிலையில் வணங்கானில் பாலா- அருண் விஜய் உடன் கவிஞர் வைரமுத்து-வும் இணைந்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுத உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீப காலமாகவே ஒரு சில சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டிருக்கும் வைரமுத்துவிற்கு இந்த படத்தின் மூலம் நல்ல ஒரு காம்பேக் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வைரமுத்துவிடம் வணங்கான் படத்தின் கதையை பாலா சொன்ன போது அதைக் கேட்டு திகைத்துள்ளார்.
இந்த படத்திற்காகவே தோற்காத ஆயுதங்களை தன்னுடைய பட்டறையில் இருந்து வடித்துக் கொடுப்பேன் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆகையால் வணங்கான் படத்தில் வைரமுத்து இணைந்திருப்பது படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும் என்று பாலாவும் நம்புகிறார்.
வணங்கான் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி, திருவண்ணாமலை, விழுப்புரம், பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளனர். விரைவில் இந்த படத்தின் முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்து, ரிலீஸ் தேதியையும் அறிவிக்க படக்குழு தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.