தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வம்சி இயக்க தில் ராஜு தயாரிக்கிறார். தெலுங்கு இயக்குனர், தெலுங்கு தயாரிப்பாளர் என மொத்தமாக தெலுங்கு வாசம் வீசும் ஒரு படமாக வாரிசு படம் உருவாகி வருகிறது.
இதனால் இப்படம் ஒரு நல்ல வருவாயை பெற்றுத் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏற்கனவே விஜய் ஒரு படத்திற்கு 120 கோடி சம்பளம் வாங்கி வருகிறார். இந்நிலையில் வாரிசு படம் வெளியாவதற்கு முன்பே நல்ல வருவாயை ஈட்டி உள்ளதால் அடுத்தடுத்து விஜயின் சம்பளம் பல மடங்கு உயரும் என கூறப்படுகிறது.
அதாவது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் வாரிசு படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தின் போஸ்டர் விஜயின் பிறந்தநாள் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது. மேலும் இவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
எப்போது ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கிடக்கின்றனர். இந்நிலையில் வாரிசு படத்தின் வியாபார கணக்கு வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது தமிழ்நாடு மற்றும் மற்ற மாநிலங்களின் உரிமை கிட்டத்தட்ட 200 கோடிக்கு வியாபாரம் ஆகி உள்ளது.
இது தவிர ஓடிடி உரிமம் 50 கோடிக்கும், சாட்டிலைட் உரிமம் 80 கோடி, ஹிந்தி டப்பிங் 25 கோடி, வெளிநாடு உரிமம் 50 கோடி மற்றும் பாடலுக்கான உரிமம் 10 கோடி என கிட்டத்தட்ட 400 கோடிக்கு மேல் இப்போதே வாரிசு படம் வியாபாரம் செய்துள்ளது. இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகி வசூல் செய்வது எல்லாமே லாபம் தான்.
கண்டிப்பாக வாரிசு படம் தியேட்டரிலும் நல்ல வசூலை ஈட்டும் என்பது அனைவரும் அறிந்தது தான். இதனால் வாரிசு படத்திற்கு பிறகு தளபதி விஜயின் சம்பளம் ஜெட் வேகத்தில் உயர உள்ளது. இதை அறிந்த தளபதி ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்.