பொருத்து பொருத்து பார்த்து பொங்கி எழுந்த சூர்யா.. வணங்கான் படப்பிடிப்பில் பாலா செய்த 5 தில்லாலங்கடி வேலை

பாலா இயக்கத்தில் சூர்யா தனது 41வது படமான வணங்கான் படத்தில் நடித்து வந்தார். பாலா எப்போதுமே வித்யாசமான கதைகளத்துடன் படங்களை எடுக்க கூடியவர். சூர்யாவின் திரை வாழ்க்கையில் முக்கியமாக அமைந்த நந்தா மற்றும் பிதாமகன் படத்தை பாலா தான் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் இதே கூட்டணியில் படம் உருவாவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக சூர்யாவுக்கு பாலா மீது வெறுப்பு வந்துள்ளது. இதனால் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதையடுத்து சூர்யா தனது அடுத்த அடுத்த பட வேலைகளில் பிஸியாக உள்ளார். இந்த சூழலில் பாலா மீது சூர்யாவுக்கு வெறுப்பு வர காரணம் என்ன என்பது தற்போது வெளியாகி உள்ளது. அதாவது பாலா சூர்யாவை வைத்து ஒரு நாள் முழுக்க படப்பிடிப்பு எடுத்துவிட்டு அது சரி இல்லை, இது சரி இல்லை என்று அடுத்த நாளும் அதே காட்சியை எடுப்பாராம்.

மேலும் காலை 7 மணிக்கு ஷூட்டிங் என்றால் 6 மணிக்கு சூர்யா படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுவாராம். படக்குழு அனைவரும் காத்திருக்கும் நிலையில் பாலா சாவகாசமாக 10 மணிக்கு வருவாராம். ஒரு இயக்குனரே இப்படி இருக்கிறார் என பலருக்கும் இவர் மீது கோபம் வந்துள்ளது.

இதற்கெல்லாம் மேலாக ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெகு தூரத்தில் ஹீரோயின் மற்றும் பாலா ரூம் போட்டுக் கொண்டது, சூர்யா கொடுத்ததை விட அதிக கால்சூட் கேட்டு நற்சரிப்பது என பாலா செய்த ஒவ்வொரு விஷயமும் சூர்யாவிற்கு கடுப்பேற்றியுள்ளது.

மேலும் ஒரு காட்சி நன்றாக வந்த போதும் அதே காட்சியை மீண்டும் மீண்டும் எடுத்து வெறுப்பேத்தியுள்ளார். அதற்கான காலமும், பணமும் தான் விரயம் ஆகியுள்ளது. இதற்குமேலும் பாலா சொன்னதை கேட்டால் அவ்வளவு தான் என சூர்யா சுதாகரித்துக் கொண்டு தனது அடுத்த பட வேலை பார்க்க ஆரம்பித்து விட்டார்.