இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் சுமார் 1500-க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்த இசைஞானி இளையராஜா, தற்போதைய காலகட்டத்தில் இருக்கும் இளம் இசையமைப்பாளர்களுக்கு போட்டியாக தொடர்ந்து படங்களில் இசை அமைத்துக் கொண்டிருக்கிறார். அதிலும் இவருடைய இசையில் சமீபத்தில் வெளியான விடுதலை, கஸ்டடி, மாடர்ன் லவ்: சென்னை உள்ளிட்ட படங்களில் தன்னுடைய இசை ராஜ்யத்தை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
இவர் தமிழ் திரைப்படங்களில் மேற்கத்தி இசைக் கருவிகளும், ஹிந்தி சினிமா பாடல்களின் தாக்கமும் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கும் சமயத்தில் தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவிகளான உருமி, பறை போன்ற கருவிகளை பயன்படுத்தி ஒரு புதிய இசை புரட்சியையே ஏற்படுத்தியவர். இப்படி தமிழ் சினிமாவின் முக்கிய அங்கமாக இருக்கும் இளையராஜாவை பற்றி சமீப காலமாகவே ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்புகிறது.
அதிலும் இப்போது வெளியாகியிருக்கும் தகவலில் இளையராஜாவை தேசிய விருது வாங்கிய இயக்குனர் ஒருவர் அவமானப்படுத்தி இருக்கிறார். அதுமட்டுமல்ல அவர் இல்லாமலே வெற்றியும் பெற்றுவிட்டார். காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களில் பெரிய அளவில் வசூல் இல்லை என்றாலும், தரமான படங்களை கொடுத்து இயக்குனர் மணிகண்டன்.
இவர் இயக்கத்தில் கடைசி விவசாயி என்ற படம் உருவாகி, அதில் 75 வயது முதியவர் கதையின் நாயகனாக நடித்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு நடித்தனர். இந்த படத்திற்கு முதலில் இளையராஜாவை தான் இசையமைக்க வைத்தார். பேக் ரவுண்ட் மியூசிக் மட்டும் செய்திருந்தார், அதை வைத்து உலக சினிமாக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் பின் கருத்து வேறுபாடு காரணத்தால் இளையராஜா எனக்கு தேவையில்லை என்று தூக்கி எறிந்து விட்டு, சந்தோஷ் நாராயணனை இசையமைக்க வைத்தார். படம் பெரிய அளவில் மக்களிடம் சென்று சேரவில்லை. ஆனால் தரமான படம் தேசிய விருது பெற்றது மணிகண்டனுக்கு நல்ல பெயரும் கிடைத்தது. இதுவரை இந்த சினிமாவில் நான் பட்ட அவமானம் இது மாதிரி பட்டதே இல்லை என்று வருத்தப்பட்டு பேசியுள்ளார் இளையராஜா.
பின் மணிகண்டன் மீது இசையமைப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டது. எனது இசையில் உருவான படத்தை உலக சினிமாக்களுக்கு அனுப்பி, வெற்றி கிடைத்ததும் என்னை தூக்கி எறிந்து விட்டார் என குற்றம் சாட்டப்பட்டது. நல்ல பெயர் எடுத்தாலும் மணிகண்டனுக்கு இதன் மூலம் இளையராஜா ரசிகர்கள் திட்டி தீர்த்தனர்.