நடிகர் முரளியை வைத்து ஹிட் கண்ட இயக்குனரின் புது அவதாரம்.. என்ன 47 வயதில், 23 வயது நடிகை உடன் ஜோடியா?

Actor Murali: கன்னட மொழி படங்களில் அறிமுகமாகி, அதன் பின்பு தன் திறமைக்கான வாய்ப்பினை தமிழில் பெற்று தனக்கான அங்கீகாரத்தை உருவாக்கிக் கொண்டவர் முரளி. இவரின் எண்ணற்ற படங்களில் இதயம் படம் இவருக்கு மாபெரும் வெற்றியை பெற்று தந்தது. இந்நிலையில் இப்பட இயக்குனர் மேற்கொள்ளும் புது அவதாரம் பற்றிய தகவலை இங்கு காண்போம்.

1991ல் காதல் காவியமாய் உருவான படம் தான் இதயம் இப்படத்தின் இயக்குனர் கதிர் இப்படத்தை முடிவில்லாத தொடர்கதையாய் முடித்திருப்பார். இவர் மேற்கொண்ட முதல் படமே வெற்றியை சந்தித்த நிலையில், அதை தொடர்ந்து இவர் மேற்கொண்ட காதல் தேசம், காதலர் தினம் போன்ற படங்கள் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று தந்தது.

அவ்வாறு தனக்கான வெற்றினை பெற்று வந்த இவர் 2006க்கு பிறகு எந்த படமும் இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் படங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு என்ற நிலையில், தற்பொழுது ரீ என்ட்ரி கொடுக்க தயாராக இருக்கிறார்.

ஆனால் அதில் தான் இவர் ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார். இம்முறை இயக்கப் போவதில்லையாம் படம் ஒன்றில் ஹீரோவாக களம் இறங்க போகிறாராம். இவரின் படம் வரப்போகுது என ஆசைப்பட்டிருந்த இந்த வேளையில் சஸ்பென்ஸாய் இவர் கூறிய தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுவும் தற்பொழுது 47 வயதாகும் இவர் லவ் டுடே படத்தின் நாயகியான 23 வயது இவானாவுக்கு ஜோடியா என வியக்கும் அளவிற்கு ஒரு அதிர்ச்சி தகவலை கொடுத்திருக்கிறார். இதை யாரும் எதிர்பார்க்க முடியாத தகவலாக இருந்தாலும், இப்படத்தில் இவருக்கேற்ப விருப்பமான ஏ ஆர் ரகுமான் தான் இசையமைக்கிறாராம்.

மேலும் லவ் டுடே படத்தின் ஒளிப்பதிவாளர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறாராம். இவர் படம் இயக்குவது மீண்டும் மகிழ்ச்சியாக இருந்தாலும் இவரே ஹீரோவாக நடிப்பது அதிர்ச்சியை உண்டுபடுத்துகிறது. இது எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.