லியோ டீமில் இணைந்த அடுத்த 5-வது புது வில்லன்.. சர்ப்ரைஸ் கொடுத்தே திக்கு முக்காட வைக்கும் லோகேஷ்

தற்போது சோசியல் மீடியாவை திறந்தாலே லியோ திரைப்படத்தை பற்றிய பேச்சு தான் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்த திரைப்படத்தின் சூட்டிங் இப்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. அப்போது எடுக்கப்படும் புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும் மீடியாவில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரிக்க வைக்கிறது.

போதாத குறைக்கு படத்தில் இருக்கும் நட்சத்திர பட்டாளங்களும் பெரும் ஆவலை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது லியோ திரைப்படத்தில் புது வில்லன் ஒருவர் களமிறங்கி இருக்கிறார். ஏற்கனவே இதில் சஞ்சய் தத், மன்சூர் அலிகான், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அதில் சஞ்சய் தத் மெயின் வில்லன் என்பது அனைவருக்கும் தெரியும்.

சமீபத்தில் கூட அவர் காஷ்மீரில் விஜய்யுடன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வரும் போது எடுக்கப்பட்ட போட்டோ வைரலானது. அவரைத் தொடர்ந்து படத்தில் இன்னும் மூன்று வில்லன்கள் இருக்கிறார்கள். இப்படி நான்கு வில்லன்கள் இருக்கும் நிலையில் ஐந்தாவதாக ஒரு முரட்டு வில்லனும் படத்தில் இணைந்திருப்பது பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.

அந்த வகையில் லோகேஷின் மாநகரம் திரைப்படத்தில் நடித்திருந்த மதுசூதன் ராவ் தற்போது லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் இவர் கோலிசோடா திரைப்படத்தின் மூலம் அதிக பிரபலமானார். தற்போது இவரும் லியோ டீமில் சேர்ந்துள்ளது பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே இந்த திரைப்படம் குறித்த பல விஷயங்கள் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது. அதிலும் பலர் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று இப்போதே கேலண்டரில் தேதிகளை கிழிக்க ஆரம்பித்து விட்டனர். அந்த அளவுக்கு ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் லோகேஷ் இன்னும் அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறாராம்.

அந்த வகையில் விஜய் ரசிகர்களே போதும் என்ற அளவிற்கு அடுத்தடுத்த சர்ப்ரைஸ்கள் வர இருக்கிறது. பொதுவாக ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்புதான் பரபரப்பை ஏற்படுத்தும். ஆனால் இந்த லியோ பூஜை போடுவதற்கு முன்பிருந்தே ஒரு வைப்ரேஷனை உருவாக்கி இருந்தது. அதில் அடுத்தடுத்த முன்னணி நட்சத்திரங்களும் படத்தில் இணைந்து வருவது பலரின் புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளது.