அண்ணாச்சி எடுத்த சபதம்.. தீபாவளி அன்று கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் நடிப்பில் தி லெஜன்ட் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. ஏகப்பட்ட பணத்தை வாரி இறைத்து ஹீரோவாக அறிமுகமான அண்ணாச்சியை சோசியல் மீடியாவில் பலரும் கோமாளி ரேஞ்சுக்கு கிண்டல் செய்து வந்தனர்.

ஆனால் இது போன்ற விமர்சனங்களை பார்த்து எல்லாம் அசருபவரா நம்ம அண்ணாச்சி. அப்படி இருந்தால் இவ்வளவு பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை கட்டி ஆள முடியுமா. தன்னை பற்றி வந்த விமர்சனங்களையே அவர் தூண்டுகோலாக எடுத்துக்கொண்டு தற்போது ஒரு சபதத்துடன் களமிறங்கியுள்ளார்.

தன்னை ஏளனமாக பேசும் இந்த துறையில் ஜெயிக்காமல் விடக்கூடாது என்ற முடிவில் இருக்கும் அண்ணாச்சி அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது ஐந்து கதைகளை கேட்டு ஓகே செய்து வைத்திருக்கிறாராம்.

அந்த கதைகளை கூறிய அத்தனை பேரும் இளம் இயக்குனர்கள் தான். கதையும் இளைஞர்கள் சம்பந்தப்பட்ட கதைதான். இது போன்ற கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் அண்ணாச்சி தன்னுடைய அடுத்த பட அறிவிப்பை தீபாவளி அன்று வெளியிட இருக்கிறார்.

அவர் தன்னுடைய சொந்த தயாரிப்பில் தான் இந்த படங்களை தயாரிக்க இருக்கிறார். தி லெஜன்ட் திரைப்படம் போலவே அவர் நடிக்க இருக்கும் அடுத்தடுத்த படங்களும் பிரம்மாண்டத்திற்கு குறைவில்லாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அனைவரையும் அசரடிக்கும் அளவுக்கு ஒரு வெற்றி திரைப்படத்தை கொடுக்காமல் விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் அண்ணாச்சி அடுத்த திரைப்படத்தில் பயங்கர யூத்தாக தோன்ற இருக்கிறாராம். இதுதான் தற்போது கோடம்பாக்கத்தில் பரபரப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருட தீபாவளி அண்ணாச்சியின் அதிரடி அறிவிப்பால் களை கட்ட போகிறது.