எம்ஜிஆரை கிண்டல் செய்யும் ஒரே நடிகர்.. கடைசி வரை தலைவலி கொடுத்த நலவிரும்பி

அந்த காலத்தில் திரையுலக ஜாம்பவானாக இருந்த எம்ஜிஆர் படப்பிடிப்பு தளத்திற்கு வருகிறார் என்றாலே அனைவரும் கப்சிப் என்று அமைதியாகி விடுவார்கள். அவர் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் நேரத்தில் யாரும் அனாவசியமாக பேசக்கூட மாட்டார்கள். அந்த அளவுக்கு படப்பிடிப்பு தளம் மிகவும் அமைதியாக இருக்கும். அதைத்தான் எம்ஜிஆரும் விரும்புவார்.

மேலும் எம்ஜிஆர் இடம் அனைவரும் மரியாதையுடன் தான் பேசுவார்கள் ஆனால் ஒரே ஒரு பிரபலம் மட்டும் அவரை கலாய்த்து கிண்டல் செய்யும் அளவுக்கு இருந்திருக்கிறார் சொல்லப் போனால் எம்ஜிஆர் சினிமாவுக்கு வந்ததிலிருந்தே அவருக்கு நெருங்கிய நண்பராகவும் அந்த பிரபலம் இருந்திருக்கிறார். அவர் வேறு யாரும் அல்ல தன்னுடைய காமெடி மூலம் அனைவரையும் ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்த நடிகர் சந்திரபாபு தான்.

எம்ஜிஆரின் மூலம் தான் அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் பெரிய நடிகராக உயர்ந்த அவர் எம்ஜிஆரையே அவ்வப்போது கிண்டல் செய்வாராம். அவர்கள் இருவரும் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். ஆனாலும் எம்ஜிஆர், சந்திரபாபுவை பார்த்தால் எங்கே நம்மை கலாய்த்து, கிண்டல் செய்து விடுவாரோ என்று எஸ்கேப் ஆகி விடுவாராம்.

ஒருமுறை எம்ஜிஆர் குலேபகாவலி என்ற திரைப்படத்தில் பெண் வேடமிட்டு நடித்திருந்தார். அதை பார்த்த சந்திரபாபு அவரை பயங்கரமாக கிண்டல் செய்தாராம். அவரிடம் இருந்து எம்ஜிஆரை காப்பாற்றவே தயாரிப்பாளருக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டதாம். அந்த அளவுக்கு அவர் எம்ஜிஆரிடம் மிகவும் உரிமையான நலம் விரும்பியாக இருந்திருக்கிறார்.

மேலும் சந்திர பாபுவை எம்.ஜி.ஆர் பாபு சார் என்று அன்போடு அழைப்பாராம். ஆனால் சந்திரபாபு மிஸ்டர் எம் ஜி ராமச்சந்திரன் என்று தான் அழைப்பாராம். இது பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்தாலும் அந்த அளவுக்கு அவர்கள் இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்ததாகவே பலரும் கூறுகின்றனர்.

ஆதலால் மிகப் பெரும் உயரத்தில் இருந்த எம்ஜிஆருக்கு நலம் விரும்பியாகவும், அதே சமயம் அவருக்கு தீராத தலைவலியாகவும் சந்திரபாபு இருந்திருக்கிறார். மேலும் திரை உலகில் இயக்குனர், நடிகர், பாடகர், டான்சர் என்று பன்முக திறமை கொண்ட சந்திரபாபு தன்னுடைய 46 வயதிலேயே உடல்நல குறைவின் காரணமாக இறந்தது குறிப்பிடத்தக்கது.