கோடியில் புரண்டாலும் படுக்கை தரையில் தான்.. சூப்பர் ஸ்டாரின் மறுபக்கம்

Actor Rajini: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆரம்பத்தில் கண்டக்டராக இருந்த ரஜினி மூன்று வேளை சாப்பாடு, செலவுக்கு கொஞ்சம் பணம் இருந்தால் போதும் என்பதுதான் அவருடைய நிலைப்பாடாக இருந்தது. ஆனால் அவர் இன்று யாரும் எதிர்பார்க்காத வண்ணம் உச்சாணிக்கொம்பில் அமர வைத்தது தமிழ் சினிமா.

அதோடு மட்டுமல்லாமல் ரஜினிக்கு ஆரம்பத்தில் புகைபிடித்தல் மற்றும் மது பழக்கம் இருந்ததாக அவரே பல மேடைகளில் கூறியிருக்கிறார். அதிலிருந்து மீண்டு வருவதற்கு தனது மனைவிதான் காரணம் என்று கூறுகிறார். அதாவது லதா ரஜினிகாந்த் அன்பால் ரஜினியை மாற்றி இருக்கிறாராம். மேலும் பலரும் அறியாத ரஜினியின் மறுபக்கம் ஒன்று இருக்கிறது.

கதாநாயகனாக 72 வயது வரையும் நடிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. சினிமாவில் 80, 90 வயதை தாண்டி நடித்த பிரபலங்களும் இருக்கிறார்கள். ஆனால் 70 வயதை கடந்து கதையின் நாயகனாக படத்தை தூக்கி பிடிக்கும் கதாபாத்திரத்தில் நடிப்பது சாதாரண விஷயம் கிடையாது. அந்த அளவுக்கு தனது உடல் மற்றும் மனதை பக்குவமாக வைத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

அதற்காக அவர் தினமும் என்னென்ன செய்து வருகிறார் என்பதை இப்போது பார்க்கலாம். தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்கிறாராம். இதை அடுத்து 20 நிமிடம் உடற்பயிற்சி, ஐந்து முதல் ஆறு யோகா ஆசனங்கள் செய்து வருகிறாராம். மேலும் அதிகபட்சமாக வெள்ளை நிற உணவுகளை ரஜினி தவிர்த்து வருகிறாராம்.

உப்பு, சக்கரை, ரைஸ், பால், தயிர், மைதா, வெண்ணை மற்றும் மாத்திரை ஆகிய வெள்ளை நிற பொருட்களை தவிர்த்து வருகிறதாக ரஜினி கூறியிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் ஏதாவது எண்ணம் வந்தால் உடனடியாக குரு மந்திரத்தை சொல்ல ஆரம்பித்து விடுவாராம். மேலும் இதில் பலரும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் தரையில்தான் ரஜினி அமர்வாராம்.

அதேபோல் சூப்பர் ஸ்டார் கோடியில் புரண்டாலும் தினமும் தரையில் தான் படுத்து உறங்குவேன் என்று கூறியிருக்கிறார். என்னதான் பங்களா போன்ற வீடு இருந்தாலும் ரஜினியின் இந்த எளிமை தான் தற்போது வரை அடுத்தடுத்த உயரத்திற்கு செல்ல காரணமாக இருக்கிறது. மேலும் ரஜினியின் இந்த மறுபக்கம் பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாகத்தான் அமைந்துள்ளது.