சூர்யாவின் கேரியரே காலியா.? கருப்பு ரிலீஸ் டேட்டால் ஏற்பட்ட வினை

Suriya : சூர்யாவின் முந்தைய படங்களான கங்குவா மற்றும் ரெட்ரோ ஆகிய படங்கள் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை தான் பெற்றது. கடந்த சில வருடங்களாகவே தியேட்டரில் சூர்யா வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த அட்சட்டில் இருக்கிறார்கள்.

இப்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் கருப்பு படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து உள்ள நிலையில் சாய் அபயங்கர் இசை அமைத்திருக்கிறார். சூர்யாவின் 50ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் டீசர் வெளியாகி இருந்தது.

இதில் வழக்கறிஞராக இருக்கும் சூர்யா கருப்புசாமி போல் ருத்ரம் தாண்டவம் ஆடுகிறார். சூர்யா இந்த படத்தின் மீதுதான் பெரிய நம்பிக்கை வைத்துள்ள நிலையில் எதிர்பார்க்காத ட்விஸ்ட் அமைந்துள்ளது. அதாவது கருப்பு படத்தை பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கருப்பு படத்தின் ரிலீஸ் டேட் ஏற்பட்ட பிரச்சனை

அப்படி என்றால் சூர்யாவின் கேரியரே காலியாகும் நிலை வரும் என்ற விமர்சனங்கள் வருகிறது. அதாவது விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படமும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. அதன் பிறகு முழுநேர அரசியல்வாதியாக விஜய் மாறியிருக்கிறார்.

மேலும் அவர் அரசியலில் வருவதற்கான அடித்தளமாக ஜனநாயகன் படத்தை பயன்படுத்தி உள்ளார். இதனால் ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பும் ஜனநாயகன் படத்தின் மீது இருக்கிறது. இப்படி இருக்கையில் இந்த படத்துடன் கருப்பு படம் வெளியானால் சூர்யாவுக்கு தான் சிக்கல் வரும்.

ஏனென்றால் ரசிகர்களின் கவனம் முழுக்க ஜனநாயகன் படத்தின் மீது இருக்கும் போது கருப்பு படத்திற்கு எதிர்பார்ப்பு என்பது குறையும். ஆகையால் சூர்யாவின் கருப்பு படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டால் கண்டிப்பாக வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும்.