Coolie : கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி ரஜினியின் கூலி மற்றும் ஹ்ரித்திக் ரோஷனின் வார் 2 ஆகிய படங்கள் மோதிக்கொண்டது. இதில் ரஜினியின் கூலி படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் தொடர்ந்து வருகிறது. முதல் நாளே இந்திய அளவில் கிட்டத்தட்ட 65 கோடியை தாண்டி வசூல் செய்திருந்தது.
ஆனால் வார் 2 படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் விமர்சன ரீதியாக ரசிகர்களை திருப்திப்படுத்த தவறியது. தெலுங்கில் வரவேற்பு பெரும் என எதிர்பார்த்த நிலையில் ஜூனியர் என்டிஆர் அட்டகாசமாக நடித்திருந்தாலும் 40 நிமிடங்களுக்கு பிறகு தான் படத்தில் வருகிறார்.
இவ்வாறு வார் 2 படத்தின் விமர்சனத்தினால் ஹிந்தியில் அதன் காட்சிகள் குறைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் கூலி படத்திற்கு கிடைக்கும் வரவேற்பின் காரணமாக காட்சிகளை அதிகப்படுத்தி இருக்கிறார்கள். முதல் நாளில் 3634 ஷோகள் கூலி படத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
பாலிவுட்டில் கூலிக்கு கிடைக்கும் வரவேற்பு
இரண்டாவது நாளான நேற்றைய தினம் 300க்கும் அதிகமாக ஒதுக்கப்பட்டு கிட்டத்தட்ட 4000-க்கும் மேற்பட்ட காட்சிகள் கூலி படத்திற்கு கிடைத்திருந்தது. இதைத்தொடர்ந்து இன்றைய தினம் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் அதிகமான காட்சிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறதாம்.
இதனால் கூலி படத்திற்கு 5000க்கும் மேற்பட்ட ஷோக்கள் ஒதுக்கப்பட்டிருப்பது ரஜினி ரசிகர்களை குதூகலமாக்கி இருக்கிறது. ஆனாலும் எல்லா காட்சிகளிலும் ஹவுஸ்ஃபுல்லாக இருக்கிறதாம்.
ஆகையால் பாலிவுட்டிலும் கூலி படம் வசூல் வேட்டையாடி வருகிறது. ஆனால் ஹிந்தியில் உருவான வார் 2 படம் அங்கு வசூல் செய்ய முடியாமல் திணறி வருகிறது. கூலி படத்துடன் மோதியதால் மிகப்பெரிய சரிவை சந்தித்து இருக்கிறது.