அக்கட தேசத்திற்கு கூஜா தூக்கும் தயாரிப்பாளர்.. விஜய்யை தொடர்ந்து தனுசுக்கு போட்ட ஸ்கெட்ச்

ஒரு வழியாக வாரிசு திரைப்படத்தை முடித்த விஜய் இப்போது லியோ படத்தில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதை தொடர்ந்து அவருடைய அடுத்தடுத்த படங்களுக்கான வேலைகளும் மும்முரமாக ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் விஜய்க்கு நெருக்கமாக இருக்கும் தயாரிப்பாளர் ஒருவர் அக்கட தேசத்திற்கு கூஜா தூக்கி வருவது சர்ச்சையாகி உள்ளது.

அதாவது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மூலம் பல திரைப்படங்களை தயாரித்திருக்கும் லலித்குமார் முக்கிய திரைப்படங்களை வாங்கி வெளியிட்டும் வருகிறார். அந்த வகையில் விஜய்யின் வாரிசு திரைப்படத்தை இவர்தான் தமிழ்நாட்டில் வெளியிட்டு இருந்தார். அதை தொடர்ந்து இப்போது தனுஷின் நடிப்பில் உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படத்தையும் இவர் வெளியிட இருக்கிறார். அதற்கான வேலைகள் தான் இப்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த படத்திற்கான பத்திரிகையாளர்கள் காட்சியும் தயாராகி வருகிறது. இப்படி தெலுங்கு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களின் படங்களை வாங்கி வெளியிடுவதில் இவர் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறாராம். அது மட்டுமல்லாமல் அந்த படங்களை தமிழ்நாட்டில் வெற்றி பெற செய்வதற்கு இவர் தன் சொந்த காசையும் செலவழித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இப்படி அவர் செயல்படுவதற்கு பின்னால் பல ராஜதந்திரங்கள் இருக்கிறது. அதாவது தமிழில் வெளிவரும் படங்களுக்கு இந்திய அளவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதன் காரணமாகவே தெலுங்கு தயாரிப்பாளர்கள் இப்போது தமிழில் டாப் ஹீரோக்களின் பக்கம் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். அப்படி அவர்களின் வலையில் சிக்கிய விஜய் வாரிசு படத்தால் பல விமர்சனங்களை சந்தித்தார்.

அதேபோன்று சிவகார்த்திகேயனுக்கும் பிரின்ஸ் திரைப்படம் படுதோல்வியை கொடுத்தது. தற்போது இந்த லிஸ்டில் தனுஷும் இணைவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால் அவருடைய வாத்தி திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. ஆனால் அதற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் தெலுங்கு இயக்குனர்களின் கதையில் பல குளறுபடிகள் இருப்பதுதான்.

அதாவது தமிழ் திரைப்படங்களில் இருக்கும் எதார்த்தம் தெலுங்கு திரைப்படங்களில் நிச்சயம் கிடையாது. மேலும் லாஜிக் மீறல், செட் போட்டு படம் எடுப்பது, டெக்னாலஜிகளை சரியாக பயன்படுத்தாதது போன்ற பல விஷயங்கள் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களின் சண்டை காட்சிகள் கூட கற்பனைக்கு மீறிய ஒன்றாக தான் இருக்கும்.

அப்படி இருக்கும்போது தயாரிப்பாளர் லலித் குமார் சுய லாபத்திற்காக தொடர்ந்து தெலுங்கு இயக்குனர்களுக்கு ஆதரவு கொடுத்து வருவது சில விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு பகடை காயாக அவர் இப்போது தனுஷை பயன்படுத்தி வருகிறார். அந்த வகையில் விஜய்யை தொடர்ந்து தனுஷை வைத்து அவர் போட்டிருக்கும் இந்த பிளான் எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும் என்பது படம் வெளி வந்தால் தெரிந்து விடும்.