ஒரே வரியில் செஞ்சுவிட்ட தயாரிப்பாளர்.. இளையராஜாவுக்கு நெத்தியடி

Ilayaraja : இளையராஜாவின் பாடல்கள் சமீப காலமாக சில படங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தன்னிடம் அனுமதி இல்லாமல் அந்த பாடல்கள் பயன்படுத்தப்படுவதாக இளையராஜாவும் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்புவது வழக்கமாக இருக்கிறது.

அவ்வாறு தான் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் மூன்று பாடல்கள் பயன்படுத்தப்பட்டது. இதற்காக இளையராஜா 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இருந்தார். மேலும் குட் பேட் அக்லி படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார்.

இதனால் ஜிவி பிரகாஷை பலரும் விமர்சித்து வந்த நிலையில் அவருக்கு ஆதரவாக தயாரிப்பாளர் தேன்னப்பன் பேசி இருக்கிறார். அதாவது ஜிவி பிரகாஷ், பல படங்கள் நிதி நெருக்கடியால் நிற்கும் போது தனது சம்பளத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார்.

இளையராஜாவுக்கு சரியான பாடம் புகட்டிய தயாரிப்பாளர்

அவர் ஒரு நல்ல மனிதன். மேலும் பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படத்தில் சிம்ரன் வர காட்சியில் பின்னால் எம் எஸ் வி பாட்டு தான் ஒலிபரப்புவார்கள். இதற்காக இளையராஜாவுக்கு மியூசிக் போட தெரியவில்லை என்று சொல்ல முடியுமா.

அதேபோல் தான் குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்களை ஜிவி பிரகாஷ் பயன்படுத்தி இருக்கிறார் என ஒரே போடாக போட்டிருக்கிறார். இது இளையராஜாவுக்கு செம பதிலடி கொடுக்கும் விஷயமாகத்தான் இருக்கிறது.

இயக்குனர் சொன்னதால் தான் ஜிவி பிரகாஷ் அந்த பாடலை பயன்படுத்தி உள்ளார் என்றும் தயாரிப்பாளர் தேனப்பன் கூறியிருக்கிறார். மேலும் பாடலுக்கு உரிய அனுமதி வாங்கிவிட்டு பாடல்களைப் பயன்படுத்தினால் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.