Lyca : பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் பல கோடி முதலீடு செய்து சமீபகாலமாக நஷ்டத்தை சந்தித்து வருகிறது. அவ்வாறு தான் லைக்கா நிறுவனம் தொடர் தோல்வி படங்களால் நிதி நெருக்கடியை சந்தித்து உள்ளது. இதனால் படம் தயாரிப்பதிலேயே சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
ஆனால் மிகக் குறுகிய காலத்திலேயே தொடர்ந்து மூன்று படங்களை தயாரித்து ஹட்ரிக் வெற்றியை தயாரிப்பு நிறுவனம் கொடுத்து இருக்கிறது. ப்ரொடியூசர் யுவராஜ் கணேசன் தொடர்ந்து ஹட்ரிக் வெற்றியை தனது மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மூலம் கொடுத்திருக்கிறார்.
புதுமுக இயக்குனர் விநாயக் குட் நைட் என்ற படத்தை இயக்கியிருந்தார். மணிகண்டன் நடிப்பில் உருவான இந்த படம் குறட்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
ஹாட்ரிக் வெற்றியை கொடுத்த தயாரிப்பு நிறுவனம்
அடுத்ததாக மீண்டும் மணிகண்டன் நடிப்பில் வெளியான லவ்வர் படத்தை தயாரித்து வெற்றி கண்டது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் சசிகுமார், சிம்ரன் ஆகியோர் நடிப்பில் உருவான டூரிஸ்ட் ஃபேமிலி படத்தையும் தயாரித்து இருந்தது.
இந்த படத்திற்கும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இவ்வாறு சின்ன பட்ஜெட்டில் புதுமுக இயக்குனர்களை வைத்து வெற்றி கொடுத்து வருகிறார்கள். அடுத்ததாக இதே புரொடக்சன் ஹவுஸில் ஒன்ஸ்மோர் படம் உருவாகி வருகிறது.
இதில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படமும் கண்டிப்பாக வெற்றி பெரும் என்ற நம்பிக்கையில் தயாரிப்பு நிறுவனம் உள்ளது.