அதென்ன தளபதி 4 வருஷ கணக்கு.? விஜய்யின் அரசியல் வியூகத்திற்கு எதிராக வந்த கேள்வி

Vijay: விஜய் இப்போது முழு நேர அரசியல் பணியில் ஈடுபட தொடங்கி உள்ளார். சமீபத்தில் நடந்த காவல் மரணத்தில் உடனடியாக இவர் அஜித்குமார் வீடு தேடிச் சென்று குடும்பத்திற்கு ஆறுதல் சொன்னார்.

அதேபோல் பரந்தூர் விமான நிலையம் தொடர்பான பிரச்சனையில் மக்களை அழைத்துக் கொண்டு நானே தலைமைச் செயலகத்தில் உங்களை சந்திப்பேன் என முதல்வருக்கு சவால் விட்டார். இப்படி அவருடைய அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் கவனிக்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து தற்போது விஜய் ஆளும் கட்சியின் இந்த 4 வருடத்தில் நடந்த 24 காவல் மரணத்தில் அந்த குடும்பத்தினரை சந்திக்கப் போவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் 12,500 இடங்களில் நடைபெற இருக்கிறது.

அதென்ன தளபதி 4 வருஷ கணக்கு.?

மேலும் பரந்தூர் விவகாரம் தொடர்பாக விஜய் போராட்டத்திற்கு அழைத்தால் நாங்கள் வர தயார் என போராட்டக் குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் அரசியல் வட்டாரங்கள் பரபரப்பில் இருக்கிறது.

அதேசமயம் வழக்கம் போல விஜய்க்கு எதிரான கருத்துகளும் வந்து கொண்டிருக்கிறது. அதில் தற்போது வலைப்பேச்சு அந்தணன் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார்.

அது என்ன நான்கு வருடத்தில் நடந்த காவல் மரணத்தை மட்டும் கணக்கில் எடுக்கிறீர்கள். அந்த குடும்பங்களை சந்தித்தால் மட்டும் போதாது. அதற்கு முன்பு கூட இது போன்ற மரண சம்பவங்கள் நடந்திருக்கிறது. அந்த குடும்பத்திற்கு எல்லாம் ஆறுதல், நிதி உதவி எதுவும் கிடையாதா விஜய் என கேள்வி கேட்டுள்ளார்.

உடனே Tvk கட்சியினர் அடேங்கப்பா உதவி பண்ணிட்டு இருக்குற விஜய்யை இந்த கேள்வி கேட்கிறார். அப்படின்னா ஆட்சி பண்ணிட்டு இருக்க அப்பாவ எப்படி எல்லாம் கேள்வி கேட்டு இருப்பார் என பதிலடி கொடுத்து வருகின்றனர்.