Vishal, Udhayanidhi: நடிகர் விஷாலுக்கு கெட்ட நேரம் பிடித்து ஆட்டி வருகிறது. எதைத் தொட்டாலும் பிரச்சனை என்று தான் சமீபகாலமாக சிக்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு சரியாக படங்களும் அமையவில்லை. இதற்கு காரணம் அவர் படப்பிடிப்புக்கு சரியாக போகாததால் தயாரிப்பாளர்கள் படம் கொடுக்க மறுக்கிறார்கள்.
ஆனால் சமீபத்தில் அவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் மார்க் ஆண்டனி ட்ரெய்லர் வெளியாகி இருந்தது. எஸ்ஜே சூர்யா, விஷால் காம்போவில் உருவாகி இருக்கும் இந்த ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது. மார்க் ஆண்டனி படத்தின் மூலம் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் விஷால் மற்றும் உதயநிதி இடையே ஒரு பிரச்சனை நடந்த நிலையில் அதற்கான காரணம் என்ன என்பதை வலைப்பேச்சு அந்தணன் ஒரு யூடியூப் பேட்டியில் கூறி இருக்கிறார். அதாவது விஷாலுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் வரிசையில் சண்டக்கோழி படம் முக்கியமான படமாக அமைந்தது.
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்று முடிவு செய்திருந்தனர். அப்போது உதயநிதியிடம் விஷால் லிங்குசாமிக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டாம். அவருக்கு இதெல்லாம் ரொம்ப அதிகம் என உதயநிதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். ஆனால் உதயநிதி உனக்கு சம்பளம் அதிகமாக வேண்டும் என்றால் கேட்டு வாங்கிக் கொள்.
அதற்காக அவரிடம் பேசப்பட்ட சம்பளத்தை குறைக்க முடியாது என கூறியிருக்கிறார். இதனால் தான் இவர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்ட நீண்ட காலமாக சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு தாமதமானது. அதன் பிறகு பல வருடங்கள் கழித்து அந்த படத்தை விஷாலே தயாரித்தார்.
மேலும் விஷாலுக்கு எப்போதுமே நாக்கில் தான் சனி. ஏதாவது ஏடாகூடமாக பேசி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். மேலும் நடிகர் சங்க தேர்தல், தயாரிப்பு சங்க தேர்தலில் நின்று ஜெயித்து நிறைய வாக்குறுதிகள் கொடுத்த நிலையில் தற்போது வரை ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. இனியாவது விஷால் நிதானமாக செயல்பட வேண்டும் என்று வலைப்பேச்சு அந்தணன் கூறி இருக்கிறார்.