Actor Vadivelu: வைகைப்புயல் வடிவேலு தன்னுடைய படங்களில் நிறைய நடிகைகளுடன் அதிகம் ஜோடி போட்டுள்ளார். அந்த வகையில் கோவை சரளா மற்றும் வடிவேலு காம்பினேஷனில் வெளியான படங்கள் இப்போது வரை ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் படியாக இருக்கிறது. ஆனால் கோவை சரளாவின் பட வாய்ப்பு போவதற்கும் வடிவேலு தான் காரணம் என்று கூறப்பட்டது.
ஏனென்றால் தன்னைவிட அதிக பாராட்டுக்கள் யாரும் வாங்கி விடக்கூடாது என்பதில் வடிவேலு கவனம் செலுத்துவதால் கோவை சரளாவுக்கு பட வாய்ப்பு போனதாக கூறப்படுகிறது. அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்க அங்கு கோவை சரளா கொடிகட்டி பறந்தார். இந்நிலையில் வடிவேலுவுடன் கோவை சரளாவுக்கு அடுத்தபடியாக அதிக படங்களில் ஜோடி போட்டவர் சோபனா.
ஆரம்பத்தில் சின்னத்திரையில் நடித்து வந்த இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய முகபாவனை மூலம் காமெடியில் கலக்கி வந்தார். அதோடு மட்டுமல்லாமல் வடிவேலுவுடன் இவர் பண்ணும் காமெடி வேற லெவலில் இருக்கும்.
அந்த வகையில் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் வடிவேலுக்கு மனைவியாக சோபனா நடித்திருப்பார். இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே கடந்த 2011 ஆம் ஆண்டு திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் அவருக்கு உடல் ரீதியாக பிரச்சனை இருந்ததாக கூறப்பட்டது.
ஆனால் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுகுறித்து பேசி இருக்கிறார். அதாவது சோபனா சின்னத்திரை நடிக்கும் போதே தனக்கு அவரை நன்கு தெரியும் என்று கூறியிருக்கிறார். அவருடைய சில நிகழ்ச்சியில் நானும் பங்கு பெற்றிருக்கிறேன். அவருடைய இறப்பு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.
ஆனால் சோபனா இறப்பிற்கான காரணம் எங்களைப் போன்ற சில சினிமா துறையைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அதாவது சோபனா அவருடன் வேலை பார்த்த உதவி இயக்குனர் ஒருவரை காதலித்து வந்தார். இருவரும் நன்றாக நெருங்கிய பழகி வந்த நிலையில் கடைசியில் இயக்குனர் காதலுக்கு மறுப்பு தெரிவித்து விட்டார். எனவே காதல் தோல்வி காரணமாகத்தான் சோபனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பதை பயில்வான் கூறி இருக்கிறார்.