இயக்குனர் வெங்கட் பிரபு தனக்கே உண்டான ஒரு ஸ்டைலை வைத்துக்கொண்டு படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் மீண்டும் சினிமாவில் விட்ட மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என காத்துக் கொண்டிருந்த சிம்புக்கு மாநாடு என்ற பிளாக்பஸ்டர் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க வைத்திருந்தார் வெங்கட் பிரபு.
இந்நிலையில் சமீபத்தில் நாக சைதன்யாவை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி படம் படுதோல்வி அடைந்தது. ஆனாலும் அடுத்ததாக விஜயுடன் தளபதி 68 இல் வெங்கட் பிரபு கூட்டணி போடுகிறார். இந்த விஷயம் ஆச்சரியமாக இருந்தாலும் இதே கதை முன்பு சூப்பர் ஸ்டாரிடம் வெங்கட் பிரபு சொல்லி உள்ளார்.
ஆனால் வேலியில் போற ஓணானை எதற்கு வேட்டியில் விட வேண்டும் என்ற அச்சத்தில் சூப்பர் ஸ்டார் அந்த கதையை நிராகரித்து விட்டாராம். அதாவது சூப்பர் ஸ்டாரை மனதில் வைத்து அரசியல் கதை ஒன்றை வெங்கட் பிரபு தயார் செய்து வைத்திருந்தார். புலி வருது என்பது போல அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு அவர் அரசியலுக்கு வரவே மாட்டார் என்பது தெளிவாக தெரிந்தது.
அரசியலே வேண்டாம் என்று இருக்கும் ரஜினி அரசியல் கதையில் நடிக்க சம்மதிக்கவில்லையாம். இதனால் படத்தை ரிலீஸ் செய்யவும் பல பிரச்சனைகள் ஏற்படும் என்ற பயத்தில் வேண்டாம் என ஒதுங்கி விட்டார். அதன் பிறகு தான் வெங்கட் பிரபு விஜய் இடம் இந்த அரசியல் கதையை கூறியுள்ளார். தற்சமயம் விஜய் அரசியலுக்கு வருவதற்கான முன்னேற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்.
தனது ரசிகர் கூட்டத்தை அழைத்து பிரியாணி விருந்து எல்லாம் போட்டிருக்கிறார். லியோ படத்தின் ஆடியோ லான்ச் ஃபங்ஷனும் அரசியல் மாநாடு போல தான் நடக்க இருக்கிறதாம். அதுமட்டுமின்றி அதே மேடையில் தன்னுடைய அரசியல் நுழைவை பற்றியும் பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தச் சமயத்தில் அல்வா போல் இந்த கதை கிடைத்ததால் உடனே தளபதி துண்டை போட்டு லாக் செய்து விட்டார். மேலும் தளபதி 68 படம் விஜய் அரசியல் வருவதற்கு அஸ்திவாரம் போடும் படமாக அமைய உள்ளது. மேலும் இந்த படத்தை பற்றிய பல சுவாரசியமான விஷயங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கிறது.