உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் படங்களை விநியோகம் செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் போன்று பெரிய நடிகர்களின் படங்களை உதயநிதி தான் வெளியிட்டார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் துணிவு படத்தை முதலில் ரெட் ஜெயண்ட் கைபற்றியது.
ஆனால் விஜய்க்கு வாரிசு படத்தை உதயநிதியிடம் கொடுக்க மனமில்லை. ஆகையால் தமிழ்நாட்டில் வாரிசு படத்தை லலித் வெளியிடுவதாக தகவல் வெளியானது. இப்படி இருக்கும் சூழலில் சென்னையில் முக்கிய இடங்களில் வாரிசு படத்தை கடைசியில் ரெட் ஜெயண்ட் வெளியிட்டது.
இவ்வாறு உதயநிதியிடம் விஜய் அடிபணிய காரணம் என்ன என்பதை சவுக்கு சங்கர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது இப்போது விஜய் 100 கோடியை தாண்டி சம்பளம் வாங்கினாலும் தமிழ்நாட்டில் திரையரங்குகளில் அவரது படம் வெளியாக வேண்டும் என்றால் அது உதயநிதியால் மட்டுமே முடியும்.
அதனால் தான் வாரிசு படம் ரிலீசுக்கு முன்பே தில் ராஜு தமிழ் சினிமாவில் விஜய் தான் நம்பர் ஒன், அவருக்கு அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என்று உதயநிதியிடம் கேட்கப் போவதாக அறிவித்தார். அந்த அளவுக்கு தமிழ் சினிமாவை உதயநிதி கட்டி போட்டு வைத்துள்ளார். அவர் நினைத்தால் மட்டுமே இன்று திரையரங்குகளில் ஒரு படம் வெளியாக முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
விஜய்க்கு ஒரு மாஸ் ஆடியன்ஸ் இருந்தாலும் அவரின் படத்தை பார்க்க திரையரங்குகளுக்கு தான் வந்தாக வேண்டும். மேலும் உதயநிதியால் அவரது படங்கள் குறைந்த திரையரங்குகளில் வெளியாகி வசூல் ஆகவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு மிகுந்த நஷ்டம் ஏற்படும். தயாரிப்பு சங்கத்தினர் விஜய் இடம் தான் முறையிடுவார்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் குசேலன் படமே தோல்வி அடைந்த போது தயாரிப்பாளர்கள் அவரது வீட்டின் முன் தர்னாவில் ஈடுபட்டனர். சூப்பர் ஸ்டாருக்கே இந்த நிலைமை என்றால் விஜய் எல்லாம் எம்மாத்திரம். அதனால் தான் வாரிசு படத்தை சென்னையில் உதயநிதி வெளியிட விஜய் சம்மதித்தார் என்று சவுக் சங்கர் கூறியுள்ளார்.