நாலு வருட தவம், அட்லீயை உருட்டும் கெட்ட நேரம்.. தள்ளி போகும் ரிலீஸ் தேதி

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் சில படங்கள் இயக்கிய நிலையில் குறுகிய காலத்திலேயே பாலிவுட் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். அதுவும் அங்கு உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஷாருக்கான் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் தொடங்கியதில் முதலே பல பிரச்சனைகள் ஷாருக்கான் தொடர்ந்து வருகிறது.

நான்கு வருடங்களாக ஜவான் படத்தை மட்டுமே உருட்டி வந்தார். ஒரு வழியாக இந்த ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி ஜவான் படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் இதிலிருந்து அட்லீ புதிதாக அடுத்த படத்தில் கமிட்டாகுவார் என எதிர்பார்த்தார். ஆனால் படத்தின் டீசர், ட்ரைலர் என எதையுமே படக்குழு வெளியிடாத காரணத்தினால் குறித்த தேதியில் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்தது.

இந்த சூழலில் ஜவான் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய் உள்ளது. அதாவது ஆகஸ்ட் 25ஆம் தேதி ஜவான் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த கால தாமதத்திற்கான காரணம் இரண்டு இருக்கிறது. ஒன்று ஜவான் படத்தின் வி எஃப் எக்ஸ் வேலைகள் இன்னும் மீதம் இருக்கிறதாம். அதற்கான நேரம் சற்று அதிகமாக தேவைப்படுவதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய் உள்ளது.

மற்றொன்று இப்போது வெளியிட்டால் வசூல் ஓரளவு பாதிக்கக்கூடும் என்பதால் அட்லீ ஒரு திட்டம் தீட்டி உள்ளார். அதாவது ஆகஸ்ட் பத்தாம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிட்டால் அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை. அதற்கு அடுத்த நாட்களும் ஓனம், ரக்ஷா பந்தன் என தொடர் விடுமுறை நாட்களாக அமைகிறது.

ஆகையால் இப்படி ஒரு வார விடுமுறை கிடைத்தால் கண்டிப்பாக திரையரங்குகளில் ரசிகர் கூட்டம் அலைமோதும். எனவே மிகக் குறுகிய காலத்திலேயே போட்ட பட்ஜெட்டை எடுத்து விடலாம் என்ற எண்ணத்தில் அட்லீ ஜூன் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதத்திற்கு ஜவான் ரிலீஸை தள்ளி வைத்துள்ளார்.

இதே ஆண்டு டிசம்பர் மாதம் ஷாருக்கானின் டுங்கி படமும் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இதே ஆண்டு பதான் படம் வெளியாகி ஷாருக்கான் ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. இந்த சூழலில் அடுத்தடுத்த ஷாருக்கான் படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்க வர இருக்கிறது.