பாலிவுட்டில் அட்லீயின் அறிமுக படம் தான் ஜவான். ஷாருக்கான், நயன்தாரா, பிரியாமணி, விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு போன்ற பிரபலங்கள் ஜவான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பல வருடங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதாவது தனது குடும்பத்துடன் இப்படத்திற்காக அட்லீ மும்பையில் செட்டிலாகி இருந்தார்.
இதற்காக 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் அட்லீ தங்கி இருந்தார். இவற்றிற்கெல்லாம் பல கோடி செலவாகி உள்ளது. இது தவிர ஜவான் படத்தில் எடுத்த காட்சியை மீண்டும் எடுத்து பணத்தை விரயமாக்கி இருந்தார் அட்லீ. இதனால் ஷாருக்கான் என்ன செய்வதென்று புலம்பித் தவித்து வந்தார்.
ஆனால் அட்லீயோ போட்ட பட்ஜெட்டை விட பல மடங்கு எடுத்து விடலாம் என்று ஆறுதல் சொல்லியிருந்தார். மேலும் ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளியான பதான் படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. பாலிவுட்டில் தொடர்ந்து படங்கள் தோல்வி அடைந்து வந்த நிலையில் ஷாருக்கான் பதான் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவை தூக்கி வைத்திருந்தார்.
அதுமட்டுமின்றி பதான் படத்தில் தீபிகா படுகோன் படு கவர்ச்சியான நடனமாடி இருந்ததால் ஜவான் படத்திலும் நயன்தாராவை கவர்ச்சியாக அட்லீ காட்டி இருக்கிறாராம். இதற்கு ஆரம்பத்தில் மறுத்த நயன்தாரா பிறகு அட்லீ மற்றும் ஷாருக்கான் கேட்டுக் கொண்டதால் நடிக்க சம்மதித்து உள்ளார்.
இந்நிலையில் ஜவான் படத்தின் பேட்ச் வேலைகள் மட்டும் நிலுவையில் உள்ளதாகவும் அது இந்த மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் ப்ரோமோஷனுக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. ஜவான் படத்தின் டிரைலரை மே முதல் வாரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி ஜூன் இரண்டாம் தேதி திரையரங்குகளில் ஜவான் படம் வெளியாக உள்ளதாக நம்பகத் தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. ஜவான் படத்தை எடுப்பதாக அட்லீ ஷாருக்கானின் கஜானாவை காலி செய்த நிலையில் கல்லா கட்டுவதற்காக ரிலீஸ் தேதியை ஷாருக்கான் லாக் செய்து வைத்துள்ளார்.