அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படம் வரும் பொங்கலன்று விஜய்யின் வாரிசு படத்துடன் மோதவுள்ளது. இப்படத்தின் அபிடேட்டாக சில்லா சில்லா, காசேதான் கடவுளடா உள்ளிட்ட பாடல்களும் போஸ்டர்களும் வெளியாகி வைரலானது. இதனிடையே துணிவு படத்தின் படப்பிடிப்பின் போதே விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் அஜித் தனது அடுத்த படமான தல 62 படத்தில் நடிக்கவுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ செய்தி வெளியானது.
விக்னேஷ் சிவனும், நயந்தாராவை திருமணம் செய்துகொண்டு இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான குஷியில் தல 62 படத்தை இயக்க தற்போது வேகமாக ஆயத்தமாகியுள்ளார். இப்படத்தின் அப்டேட் தற்போது இணையத்தில் உலா வந்து வைரலாகியுள்ளது. முதலில் இப்படத்தின் கதையை அரசியல் சம்பந்தமாக எழுதி அஜித்திடம் காண்பித்துள்ளார் விக்னேஷ் சிவன்.
ஆனால் அஜித்திற்கு அந்த கதையில் நடிக்க விருப்பமில்லாததால் மொத்த கதையையும் மாற்றி அமைத்து தற்போது முகவரி பட பாணியில் ஒரு பீல் குட் கதையை உருவாக்கியுள்ளார் விக்னேஷ் சிவன். இந்த கதையில் நடிக்க ஓகே சொல்லியுள்ள அஜித், படத்தின் ஷூட்டிங்கை ஜனவரி 2 வது வாரத்தில் அதாவது வரும் பொங்கல் பண்டிகை சமயத்தில் பூஜைப் போட்டு தல 62 படத்தை மும்பையில் ஆரம்பிக்கலாம் என முடிவு செய்துள்ளனர்.
பில்லா படத்திற்கு பின்பு நடிகர் அஜித் ஆக்ஷன் மற்றும் ஆன்டி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், தல 62 படத்தில் சாந்தமாக நடிக்கப்போகிறார் என்ற செய்தி அவரது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வலிமை திரைப்படம் இந்தாண்டு ஆக்ஷன் மாஸ் படமாக வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
தற்போது துணிவு படமும் மாஸ் படம் தான் என்பதை அஜித் கையில் துப்பாக்கியுடன் வலம் வந்த போஸ்டரிலேயே தெரிகிறது. இந்நிலையில் ஆக்ஷன் படங்கள் இளைஞர்களை தவிர மற்ற வயது ரசிகர்களுக்கு பார்க்க உகந்ததாக இருக்காது. அந்த வகையில் காலம் காலமாக ஒரு படத்தை குடும்பத்துடன் இணைந்து பார்க்கக்கூடிய படமாக தல 62 படத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 96, பேரன்பு, மொழி, அன்பேசிவம், இறுதி சுற்று போன்ற படங்களைப் போல் எத்தனை வருடங்கள் ஆனாலும் சலிக்காமல் பார்க்கும் படமாக இருக்க வேண்டும் என்பதே அஜித்தின் ஆசை.
பொதுவாக விக்னேஷ் சிவனின் படங்களும் சற்று ஆக்ஷன் கலந்த கமெர்சியல் திரைப்படமாகவே இருக்கும். தற்போது ஆக்ஷன் காட்சிகளே இல்லாமல் புது முயற்சியில் அஜித்தை வைத்து படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா முதலில் புக் செய்யப்பட்ட நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் அல்லது நடிகை திரிஷா நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.