கங்குவாவை மிஞ்சுமா புறநானூறு பட கதை.? உண்மை சம்பவத்துடன் அடுத்த தேசிய விருதுக்கு ரெடியான சுதா கொங்காரா

Surya in Next Movie: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா கங்குவா படத்தில் வரலாற்று கதையை மையமாக வைத்து நடித்துக் கொண்டு வருகிறார். இப்படம் மிகப் பிரமாண்டமாக பான் இந்தியா மூவியாக பொங்கலையொட்டி ரிலீஸ் ஆகப்போகிறது. இப்படம் 3டி தொழில்நுட்பத்துடன் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கப் போவதாக இருந்தது.

ஆனால் தற்போது வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் ரொம்பவே பிஸியாக இருப்பதால் வாடிவாசல் படத்தை தற்போதைக்கு தள்ளி வைத்திருக்கிறார். அதனால் சூர்யா அவருடைய 43வது படத்தை சுதா கொங்காரா இயக்கத்தில் நடிப்பதற்கு தயாராகி விட்டார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளிவந்த சூரரை போற்று எக்கச்சக்கமான விருதுகளை வாங்கி குவித்தது.

அத்துடன் இப்படத்தின் மூலம் சூர்யாவிற்கும் சினிமாவில் மார்க்கெட் ரேட் கூடிவிட்டது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு சூர்யாவின் நடிப்பும் கதையையும் மிகப் பிரமாண்டமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுதா கொங்காரா. அந்த வகையில் மறுபடியும் இணைந்திருக்கும் இந்தக் கூட்டணி மீண்டும் தேசிய விருதை வாங்குவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

ஏனென்றால் இப்படம் முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இருக்கப் போகிறது. அப்படிப்பட்ட இப்படத்திற்கு சுத்த தமிழில் பெயர் வைத்து டைட்டிலே சும்மா தெறிக்க விட்டிருக்கிறார்கள் படக்குழு. அப்படி என்ன டைட்டில் என்றால் சூர்யாவின் 43வது படத்திற்கு புறநானூறு என்று வைக்கப்பட்டிருக்கிறது.

அதாவது 1965ல் உள்ள காலகட்டத்தில் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு இப்படத்தை எடுக்கப் போகிறார்கள். அந்த வகையில் சூர்யாவிற்கு எப்போதுமே தமிழ் பற்று இருக்கும் என்பதை இப்படத்தின் மூலம் காட்டுகிறார். அதனால் கண்டிப்பாக இப்படம் மக்களுக்கு பிடித்தமான கதையாக இருக்கப் போகிறது.

மேலும் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் கங்குவா படத்தையும் புறநானூறு படம் மிஞ்சுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இந்த மாதிரியான உண்மை சம்பவம் மற்றும் தமிழ் மக்களை பெருமைப்படுத்தும் விதமாக படம் இருந்தால் கண்டிப்பாக மக்களிடம் இருந்து அதிக வரவேற்பை பெறும். அந்த வகையில் இப்படமும் தேசிய விருதை வாங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது.