அஜித் நடிப்பில் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் துணிவு படத்தை குறித்து தல ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் படத்தின் கதை வங்கிக் கொள்ளையே இல்லை என்ற தகவல் வெளியானது. அது மட்டுமின்றி துணிவு படத்தின் கதை என்ன, இயக்குனர் ஹெச் வினோத் படத்தில் வைத்திருக்கும் ட்விஸ்ட் எது என்பதும் தெரிய வந்துள்ளது.
1987 ஆம் ஆண்டு பஞ்சாபில் நடந்த வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டுதான் துணிவு படத்தை உருவாக்கியுள்ளனர் என்ற தகவல் ஏற்கனவே வெளியான நிலையில் அதெல்லாம் வதந்தி என்பது தெரிய வந்திருக்கிறது.
இயக்குனர் ஹெச் வினோத் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்கிய சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்கள் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றதனால் தற்போது மீண்டும் ஒரு உண்மை சம்பவத்தை வினோத் கையில் எடுப்பார் என கூறப்பட்டது.
ஆனால் துணிவு படம் வங்கிக் கொள்ளை பற்றிய படம் அல்ல. மாறாக ‘மக்களிடம் லோன் என்கின்ற பெயரில் வங்கி அடிக்கிற கொள்ளை பற்றியதுதான் துணிவு’. மேலும் இயக்குனர் ஹெச் வினோத் துணிவு படம் வங்கிக் கொள்ளை சம்பவத்தை வைத்து எடுக்கவில்லை. துணிவு, அயோக்கியர்களின் ஆட்டம் என்றும் தல ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற விட்டார்.
அதேபோன்று இப்போது சமூகத்தில் தலை விரித்து ஆடிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சனையை அஜித் கையில் எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. ஏனென்றால் சாமானியர்களிடம் வங்கிகள் அடிக்கும் மறைமுகமான கொள்ளை பற்றியும் அதில் பாமர மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதை துணிவு வெளிப்படுத்தப் போகிறது.
மேலும் பொங்கல் பண்டிகைக்காக துணிவு படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு தற்போது படத்தின் கதை எப்படிப்பட்டது என்ற விஷயம் தெரிந்ததும் இதை வைத்து சோசியல் மீடியாவில் ரணகளம் செய்து கொண்டிருக்கின்றனர். கடைசில் மொத்த பணத்தையும் அஜித் எரித்து விடுவார் எனவும் சொல்கிறார். படம் வந்து பலர் முகத்திரையை கிழிக்குமாம். பொறுத்திருந்து பார்க்கலாம்.