Actor Jayam Ravi: ஜெயம் ரவியின் திரை வாழ்வில் முக்கிய படம் என்றால் அது தனி ஒருவனாக தான் இருக்க முடியும். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
மேலும் நயன்தாரா, அரவிந்த்சாமி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்த இப்படம் 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 105 கோடி வரை வசூலித்து பாக்ஸ் ஆபிஸை மிரட்டியது. அதனாலேயே இப்படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் கேள்வி எழுப்பி வந்தனர்.
அந்த வகையில் தற்போது தனி ஒருவன் 2 படத்திற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதே கூட்டணியில் மீண்டும் உருவாக இருக்கும் இப்படத்தின் வில்லன் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தான் இப்போது அதிகமாக இருக்கிறது.
ஏனென்றால் முதல் பாகத்தில் சித்தார்த் அபிமன்யு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஜெயம் ரவியை ஓவர் டேக் செய்து அரவிந்த்சாமி மிகப்பெரிய அளவில் ஸ்கோர் செய்திருப்பார். ஆனால் படத்தின் இறுதியில் அவர் இறந்து விடுவார். அதனாலேயே இரண்டாம் பாகத்தில் அவருக்கு நிகரான ஒரு வில்லனை தான் இயக்குனர் களம் இறக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது இதில் வில்லனாக பகத் பாசில் நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் மலையாளத்தில் மிகப்பெரும் நடிகராக இருந்த இவரை தன்னுடைய வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் செய்தது மோகன் ராஜா தான். அதைத்தொடர்ந்து விக்ரம், மாமன்னன் போன்ற படங்கள் இவருக்கான மிகப்பெரும் அடையாளமாக மாறியது.
அதிலும் மாமன்னன் படத்தில் ரத்னவேலு கேரக்டரில் நடித்திருந்த பகத் பாசில் சோசியல் மீடியாவை கலங்கடித்ததை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. அப்படிப்பட்ட இவர் தனி ஒருவன் 2-ல் நிச்சயம் இணைவார் என்றும் அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கோடம்பாக்க வட்டாரத்தில் தற்போது பேசப்பட்டு வருகிறது.