8 தோல்வி படங்களை கொடுத்த கலைஞரின் வாரிசு.. அரசியலிலும் வாங்கிய மரண அடி

Kalaingar Vaarisu: ஆரம்பகால சினிமா வாழ்க்கைக்கு கலைஞரின் அர்ப்பணிப்பு மிகவும் உறுதுணையாக இருந்திருக்கிறது. சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், கதை ஆசிரியர் என்று பல பரிமாணங்களில் தொடர்ந்து இவருடைய முழு பங்களிப்பையும் கொடுத்திருக்கிறார். அதன் பின் அரசியலிலும் காலடி வைத்து ஆட்சி புரிந்து பலரையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்து சிறந்த தலைவராக ஜெயித்துக் காட்டினார்.

அப்படிப்பட்ட இவருடைய குடும்பத்திலிருந்து முதல் வாரிசாக சினிமாவிற்குள் நுழைந்து ஹீரோவாக அடி எடுத்து வைத்தவர் தான் மு.க முத்து. அதாவது இவர் ஹீரோவாக நடிக்க வற்புறுத்தியதை இவருடைய அப்பா கலைஞர் தான் என்று சொல்லலாம். ஏனென்றால் எம்ஜிஆருக்கு கிடைத்த பேரும் புகழும், தன் மகனுக்கும் கிடைக்க வேண்டும் அதன் மூலம் அரசியலிலும் ஜெயிக்கலாம் என்று கணக்குப் போட்டு இருந்தார்.

அதன்படியே 1972ல் மு.க முத்துவை பிள்ளையோ பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆக்கினார். இதற்கிடையில் 1968 இல் எம்ஜிஆருக்கு துப்பாக்கி சூட்டில் நடந்த விபரீதால் அவருக்கு காயம் ஏற்பட்டிருந்தது. அந்த நேரத்தில் மு.க முத்து சினிமாவிற்குள் புகுந்து விட்டால் அனைவருடைய கவனமும் இவர் மீது திரும்பும் என்று சரியான சந்தர்ப்பத்தில் கொண்டு வந்தார்.

இவரும் எம்ஜிஆர் போலவே நல்ல கருத்துக்களும், உடல் அமைப்பையும் மாற்றிக் கொண்டு அவருக்கு போட்டியாக அடுத்தடுத்து எட்டு படங்களில் நடித்து வந்தார், ஆனால் அந்த படங்கள் அனைத்துமே தோல்வியை தான் கொடுத்தது. அதில் பிள்ளையோ பிள்ளை, பூக்காரி, சமையல்காரன், அணையா விளக்கு, இங்கேயும் மனிதர்கள், நம்பிக்கை நட்சத்திரம், எல்லாம் அவளை, நியாயத் தரசு போன்ற படங்களில் நடித்தார்.

ஆனால் இவர் நடித்த அனைத்துமே மரண அடி வாங்கி சினிமாவில் ஒன்னும் இல்லாமல் போய்விட்டார். அந்த வகையில் இவரால் சினிமாவிலும் ஜெயிக்க முடியவில்லை, அரசியலிலும் இவருடைய கால் தடத்தை பதிக்க முடியவில்லை. கலைஞரின் குடும்பத்தில் தோல்வியை தழுவிய ஒரே மனிதர் இவராகத்தான் இருந்தார்.

இப்படி இவர் சினிமாவில் ரொம்பவே அடிபட்டதற்கு இன்னொரு காரணம் எம்ஜிஆர் தான். அதாவது ரசிகர்கள் எம்ஜிஆர் ஒருவரை மட்டும் தான் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வந்தார்கள். இவர் இருக்கும் இடத்திற்கு வேறு யாரும் தகுதி இல்லை என்பதை சுட்டிக்காட்டும் விதமாக மற்றவர்களின் நடிப்பை ஏற்கவில்லை. அந்த அளவிற்கு எம்ஜிஆர் அனைவரது மனதிலும் நின்னு சாதனை படைத்திருக்கிறார்.