டாப் 10 வரிசையில் மூன்று இடத்தை தட்டிச் சென்ற சூப்பர் ஸ்டார்.. ரஜினிக்கு நிகர் ரஜினியே!

திரையரங்கில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பால் அடுத்த கட்டமாக ஓடிடி தளத்திலும் வெளியாகி ட்ரெண்ட் ஆகும். அப்படி தமிழ் திரைப்படமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் ஓடிடி தளத்தில் திடீரென்று தற்போது ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

கடந்தாண்டு நவம்பர் நான்காம் தேதி சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆனபிறகு நெட்பிளிக்ஸ் தளத்தில் என்ற ஓடிடி தளத்தில் நவம்பர் 25 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

அண்ணாத்த படத்திற்குப் பிறகு முன்னணி நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் செய்யப்பட்டாலும் நெட்பிளிக்ஸ் தளத்தில் அண்ணாத்த திரைப்படம் மட்டும் எப்பொழுதுமே முதலிடத்தைப் பிடித்து எந்தப் படத்தையும் உள்ளே நுழைய விடாமல் இன்றுவரை ட்ரெண்டிங்கில் உள்ளது.

அதிலும் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தளத்தில் ரசிகர்கள் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் அண்ணாத்த திரைப்படம் டாப் 10-ல் மூன்று இடத்தை தட்டித் தூக்கி உள்ளது. இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் முதலிடத்தை தமிழில் திரையிடப்பட்ட அண்ணாத்த பிடித்திருக்கிறது.

இரண்டாவது இடத்தை ஹிந்தியில் வெளியான அண்ணாத்தயும், ஒன்பதாவது இடத்தை தெலுங்கில் வெளியான அண்ணாத்தயும் பிடித்திருக்கிறது. இதனால் ஓடிடி-யில் கடந்த 6 மாதங்களுக்கு மேல் ட்ரெண்டிங்கில் இருக்கும் அண்ணாத்த படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

இதனால் ரஜினிக்கு நிகர் ரஜினியே என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவருடைய ரசிகர்கள் தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.