மொத்த லாபத்தையும் அள்ளிக் கொடுத்த சூப்பர் ஸ்டார்.. படம் எடுத்து சொத்துக்களை இழந்த நடிகருக்கு செய்த உதவி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தமிழ் சினிமாவின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறார். ஆனால் பழசை மறக்காமல் ஆரம்பத்தில் உள்ளது போலவே தற்போதும் எளிமையாகவே வாழ்ந்து வருகிறார். அதுமட்டும்இன்றி தமிழ் சினிமாவில் கஷ்டப்படும் பலருக்கு தூண் போல் நின்று உதவி செய்து வருகிறார்.

ஆரம்ப காலத்தில் ரஜினியுடன் பல படங்கள் நடித்த ஒரு நடிகர் சொந்த படத்தை தயாரிக்க ஆசைப்பட்டு தன்னுடைய கையில் இருந்த அனைத்து காசையும் போட்டு படத்தை எடுத்தார். கடைசியில் படம் நஷ்டமானதால் தனது மொத்த சொத்தையும் இழந்து விட்டார்.

அதன்பின்பு ரஜினி இடம் எனக்கு ஒரு படம் பண்ணி தாருங்கள் என்று கேட்டுள்ளார். அந்த காலத்தில் ரஜினி படு பிஸியாக இருந்ததால் அவரால் கால்சூட் கொடுக்க முடியாமல் போனது. ஆனாலும் அவரது நஷ்டத்தை அறிந்த ரஜினி தான் நடித்த அருணாச்சலம் படத்தில் லாபத்தை ஒரு பங்கு அவருக்கு கொடுத்திருந்தார்.

அதுமட்டுமின்றி படத்தில் அவருக்கு முக்கிய கதாபாத்திரம் ஒன்றை நடிக்க வைத்திருந்தார். அவர் வேறு யாரும் இல்லை எம்ஜிஆர், சிவாஜி போன்ற பெரும் ஜாம்பவான்களின் படத்தில் நடித்த வி கே ராமசாமி தான் அவர். இவர் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

ராமசாமி வறுமையில் வாடிய போது சூப்பர் ஸ்டார் தான் அவருக்கு உதவி உள்ளார். இதனை விகே ராமசாமி தனது நூலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு உதவியதை குறித்து எழுதி இருந்தார். இது போன்ற பல கலைஞர்களுக்கு ரஜினி உதவி செய்துள்ளார்.

அது மட்டும் நன்றி தற்போது வரை யாருக்கும் தெரியாமல் பல உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். மேலும் இப்போது ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இதுகுறித்து அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்