பெருகி வரும் பார்ட்டி கலாச்சாரம்.. ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவை தொடர்ந்து சிக்க போகும் மூன்றெழுத்து நடிகர்

Srikanth: தற்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா விவகாரம் தான். பிரசாந்த் என்பவரிடம் ஸ்ரீகாந்த் போ..தை மருந்து வாங்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், அவரிடம் நடத்திய விசாரணையில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவும் சிக்கி இருக்கிறார்.

இவர்களிடம் தற்போது கிடுக்கு பிடி விசாரணை நடந்து வருகிறது. இதில் பல முன்னணி பிரபலங்கள் சிக்கும் சூழலும் இருக்கிறது. இதனால் திரையுலகமே பரபரப்பில் இருக்கிறது.

பெருகி வரும் பார்ட்டி கலாச்சாரம்

அது மட்டும் இன்றி பார்ட்டிகளில் தான் இந்த வஸ்து தாராளமாக கிடைக்கும். அப்படி பார்ட்டி கிங் மற்றும் பார்ட்டி குயின் ஆக வலம் வந்த பலர் இப்போது மாட்டிக்கொள்வோமோ என்ற பதட்டத்தில் இருக்கிறார்களாம்.

இதில் மூன்றெழுத்து நடிகர் ஒருவர் பெயரும் அடிபடுகிறது. அனேகமாக இன்று நள்ளிரவில் அவர் கைதாகலாம் என்ற அதிர்ச்சி தகவல்களும் கசிந்துள்ளது.

அதேபோல் பாடகி சுசித்ரா இந்த பார்ட்டி கலாச்சாரம் எல்லாம் பல வருடங்களாக நடக்கிறது. தடை செய்யப்பட்ட மருந்தும் தாராளமாக கிடைக்கிறது என ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

ஆனால் ஸ்ரீகாந்த் கைதுக்கு பிறகு இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதன்படி 10 முக்கிய பிரபலங்கள் இந்த விசாரணை வட்டத்திற்குள் வரும் வாய்ப்பு இருக்கிறதாம்.

இதில் நடிகைகளும் இருப்பது அதிர்ச்சி தான். திரை பிரபலங்கள் மட்டுமல்லாமல் பெரிய இடத்து பிள்ளைகள் கூட இதை பயன்படுத்துவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் கசிந்து உள்ளது.

தற்போது விசாரணை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் ஸ்ரீகாந்த் இந்த மருந்தை பயன்படுத்தியதோடு மற்றவர்களுக்கு விற்பனை செய்திருக்கிறாரா என்பதும் தெரியவரும்.

அது மட்டும் இன்றி மூன்றெழுத்து நடிகர் நடத்தும் பாட்டியில் யார் யார் கலந்து கொண்டார்களோ அவர்களும் சிக்குவார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் அனைத்தும் உறுதியானால் தண்டனையும் மோசமாக இருக்கும் என்கின்றனர்.