மாமன்னனில் உதயநிதி கதாபாத்திரத்தை நடிக்க மறுத்த நடிகர்.. அவர் நடித்திருந்தால் டபுள் மடங்கு லாபம் தான்

Maamannan Movie: தற்போது அமைச்சர் பதவியில் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் இனிவரும் காலங்களில் முழு அரசியல்வாதியாகவே இருக்க விரும்புகிறார். அதனால் கடைசி கடைசியாக அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து சமீபத்தில் ரிலீஸ் செய்து தற்போது வரை 40 கோடி வசூலை தட்டி தூக்கி இருக்கிறது.

ஆனால் இத்தகைய படத்தில் உதயநிதி நடித்த கேரக்டரில் வேறொரு ஹீரோவை தான் மாரி செல்வராஜ் நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறார். அந்த நடிகர் கதையைக் கேட்ட பின் நடிக்க மறுத்துவிட்டார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான ஒரு படமும் சூப்பர் ஹிட் அடித்தது.

அதேபோல இந்த முறை அந்த ஹீரோ மட்டும் நடிக்க ஒத்துக் கொண்டிருந்தால், நிச்சயம் 40 கோடி என்ன! அந்தப் படம் 100 கோடியை அசால்டாக தட்டி தூக்கி இருக்கும் என்று உண்மையை தெரிந்த பலரும் ஆதங்கப்படுகின்றனர். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் ஏற்கனவே கர்ணன் படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார்.

அதன் தொடர்ச்சியாக மாமன்னன் படத்தின் கதையையும் தனுஷை மனதில் வைத்துக்கொண்டு தான் மாரி செல்வராஜ் எழுதி இருக்கிறார். ஆனால் தனுஷ் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என சொன்னதால் உதயநிதி நடிக்க வேண்டியதாயிற்று. உதயநிதி மாமன்னனில் வெறும் 50% முயற்சியை மட்டுமே காட்டியிருக்கிறார். ஒருவேளை தனுஷ் நடித்திருந்தால் இந்த படம் வேற லெவலுக்கு ஹிட் ஆயிருக்கும்.

தனுஷிடம் எதிர்பார்க்கிற அளவுக்கு உதயநிதியிடம் நம்மளால் எதிர்பார்க்க முடியாது. அவரால் எந்த அளவிற்கு முடியுமோ அதை நிறைவாக செய்திருக்கிறார். உதயநிதியின் மற்ற படங்களை காட்டிலும் இந்த படம் பரவாயில்லை என்று சொல்லலாம். ஆனால் படத்தில் சில இடங்களில் மிகக் குறைவான நடிப்பையே வெளிக்காட்டி இருக்கிறார். ஒருவேளை தனுஷ் மட்டும் நடித்திருந்தால் வடிவேலுவா அல்லது தனுஷா என்ற போட்டி ஏற்பட்டிருக்கும். ஆனால் மாமன்னன் படத்தில் இப்போது வடிவேலுவா பகத் பாசிலா என்று இவர்களுக்குள்ளே போட்டி ஏற்பட்டிருக்கிறது.

இதற்குள் உதயநிதி பெயர் வரவே இல்லை. அந்த அளவிற்கு உதயநிதி தன்னுடைய உணர்ச்சிப் பூர்வமான முழு நடிப்பையும் காட்டவில்லை. ஆனால் அப்போது கூட இந்த படத்தின் வசூல் இதுவரை உதயநிதி நடித்த படங்களின் வசூலை காட்டிலும் அதிகமாக இருக்கிறது. ஆனால் தனுஷ் மட்டும் நடித்திருந்தால் இரண்டு மடங்கு லாபம் கிடைத்திருக்கும் என இப்போது படக்குழு ஆதங்கப்படுகிறது என திரை விமர்சகர் அந்தணன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.