சினிமாவில் மதத்தை அடையாளப்படுத்தும் விஜயின் உண்மை முகம்.. வாக்கு வங்கிக்காக குடும்பமே போடும் நாடகம்.!

விஜய் சினிமாவிற்கு உள்ளே வந்து கொஞ்சம் வளர்ந்த காலத்திலேயே விஜய் அரசியலுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவரது அப்பா சந்திரசேகர் ஆசைப்பட்டார். அதற்காக ஒவ்வொரு காயாக நகர்த்தி வந்தார் அதற்கு தகுந்த மாதிரி படங்களையும் விஜய்க்கு அமைத்துக் கொடுத்தார். ரசிகர்களை பெருமளவுக்கு திரட்டி அரசியல் கட்சி தொடங்கும் அளவிற்கு உருவாக்கி வைத்தார் சந்திரசேகர்.

திடீரென இந்த அரசியல் காரணங்களுக்காகவே விஜய்க்கும், சந்திரசேகருக்கும் பிரச்சனை ஏற்பட்டு தற்பொழுது வரை தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். ஒரேடியாக ஒதுக்கப்பட்ட எஸ்ஏசி மணமடைந்து வாழ்ந்து வருகிறார். திடீரென தனது மகன் தன்னை விட்டு பிரிந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத எஸ்ஏசி ஒரு ஜோசியரை பார்த்து என்ன காரணம் என்று தெரிந்து கொண்டார்.

அந்த ஜோசியர் நீ என்னதான் மதம் மாறி கிறிஸ்டியன் ஆக இருந்தாலும் உனது தாய் மதம் இந்து மதம் தான் அதனால் உனக்கென்று ஒரு குலதெய்வம் இருக்கும் அதை உதாசீனப்படுத்தி மறந்து விட்டாய். அதனால் தான் நீ இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறாய். உனது குலதெய்வத்தை உன்னால் கண்டறிய முடியாது. அதனால் வாரம் திங்கட்கிழமை தோறும் ஏதோ ஒரு சிவன் கோவிலுக்கு சென்று நான் சொல்லும் பரிகாரங்களை செய்து வந்தால் அனைத்தும் மாறிவிடும் என்று கூறியிருக்கிறார்.

இதனால் சந்திரசேகரம் சரி என்று சொல்லிவிட்டு அவரும் அவரது மனைவி சோபாவும் சேர்ந்து கோயில்களுக்கு சென்று வருகிறார்கள். இப்பொழுது குடும்பத்தில் ஒரு அமைதி நிலவுவதாக அவரே வெளிப்படையாக கூறி இருக்கிறார். இந்து மதத்திலிருந்து கிறிஸ்டியனாக மாறிய சந்திரசேகர் மீண்டும் இந்துவாகவே மாறிவிட்டார்.

தீவிர கிறிஸ்தவ மதத்தை பின்பற்றிய வந்த எஸ்ஏசி தனது மகனுக்கு ஜோசப் விஜய் என்ற பெயரை வைத்தே வளர்த்தார். விஜயும் தனது வளர்ந்த பிறகு எல்லா படங்களிலும் கிறிஸ்தவ மதத்தின் அடையாளத்தை காண்பிக்காமல் இருக்கவே மாட்டார். ஆனால் லியோ வெற்றி விழாவில் விஜய் குங்குமப்பொட்டும், ஆரஞ்சு நிற சட்டையும் போட்டு வந்து இருந்தார் அப்பட்டமாக தெரிந்தது இது அரசியலுக்காக தான்.

ஆனால் எஸ்.ஏ.சி தனது குடும்பத்திற்காக சிவனை வழிபட்டு இந்து மதத்திற்கு மாறியுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் இது அனைத்தும் குடும்பத்திற்காகவா இல்லை தன் மகன் அரசியலுக்காக இந்து அடையாளத்தை பயன்படுத்தி ஓட்டு வாங்குவதற்காகவா என்று ஒரு புறம் பேசப்படுகிறது. தெரியவில்லை கூடிய விரைவில் விஜய்யே இந்துவாக மாறினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை காரணம் அரசியல்.