வடசென்னை 2-வில் காத்திருக்கும் ட்வீஸ்ட்.. தனுஷ், வெற்றிமாறனின் வித்தை

Vetrimaran : நேற்றைய தினம் வெற்றிமாறன் மற்றும் சிம்பு படப்பிடிப்பில் உள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி காட்டுத்தீயாய் பரவியது. அதிலும் இதில் நெல்சன் கேமியோ தோற்றத்தில் நடிக்கிறார் என்ற சஸ்பென்சும் உடைந்து விட்டது. மேலும் சிம்புவின் கெட்டப் அப்படியே வடசென்னை மக்களின் பிரதிபலிப்பாக தான் இருந்தது.

அதோடு இந்த படத்தில் சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா போன்ற பிரபலங்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இன்றைய தினம் லைக்கா நிறுவனம் மற்றும் வொண்டர்பார் பிலிம்ஸ் ஒரு போஸ்டரை வெளியிட்டு இருக்கிறது.

அதில் சிம்பு, சமுத்திரகனி போன்றோர் இருக்கும் புகைப்படம் வெளியாகி ராஜன் வகையறா என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆகையால் இப்போது சிம்பு, அமீர் கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

வடசென்னை 2 வில் காத்திருக்கும் ட்விஸ்ட்

அதோடு தனுஷின் தயாரிப்பு நிறுவனமும் சேர்ந்த இந்த படத்தை தயாரிக்கிறது. ஆகையால் தனுஷ் மற்றும் சிம்பு இருவரும் ஒரே திரையில் வடசென்னை 2 படத்தில் நடிக்க இருக்கிறார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

ரசிகர்கள் இருவரையும் ஒரே படத்தில் காண வேண்டும் என்று பல வருடங்களாக எதிர்பார்த்து காத்திருந்தனர். மேலும் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கூட இருவரும் ஆரா தழுவிக் கொண்டிருந்தனர். சமீபகாலமாக தனுஷ் இல்லாமல் சிம்புவை வைத்து வடசென்னை 2 படத்தை வெற்றிமாறன் எடுப்பதாக தகவல் வெளியானது.

ஆனால் இப்போது எதிர்பார்க்காத டுவிஸ்ட் ஆக இருவரும் சேர்ந்து நடிக்கின்றனர். வடசென்னை படத்திலேயே தனுஷை விட அமீரின் கதாபாத்திரம் தான் வெயிட் ஆக அமைந்தது. இப்போது சிம்புவுக்கும் மிக வலுவான கதாபாத்திரத்தை வெற்றிமாறன் செதுக்கியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.