விஜய்யின் ரசிகனாக மாறிய வில்லன் நடிகர்.. வாரிசால் ஏற்பட்ட மாற்றம்

தளபதி விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில் திரை துறையைச் சார்ந்த பல பிரபலங்களும் விஜய் ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில் வாரிசு படத்தால் விஜய் மீது தீவிர ரசிகராக ஒரு வில்லன் நடிகர் மாறி உள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் படம் வாரிசு.

சமீபகாலமாக ஆக்சன் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த விஜய் வாரிசு படத்தில் சென்டிமென்ட் ஆக நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், பிரபு, குஷ்பூ, பிரகாஷ்ராஜ் மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். வருகின்ற பொங்கல் பண்டிகைகளுக்கு இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதை முன்னிட்டு நேற்று வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் வாரிசு படக்குழுவினர் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரகாஷ்ராஜ் அந்த விழாவில் விஜய் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அதாவது கில்லி படத்தில் விஜய், பிரகாஷ்ராஜ் இருவரும் நடித்திருந்தனர். அதன் பிறகு இப்போது தான் வாரிசு படத்தில் நடித்துள்ளார்கள். ஆகையால் பிரகாஷ்ராஜ் பேசுகையில் தளபதியோட 14 வருஷத்துக்கு அப்புறம் ஒரு படம் பண்ணி இருக்கிறேன், வாரிசு படத்தின் முதல் நாள் சூட்டிங்கில் விஜயின் கண்ணுக்கு கண்ணை பார்த்து ஒரு வசனம் பேசினேன்.

அந்தக் காட்சி முடிந்த பிறகு இந்தக் கண்ணை பார்த்து எவ்வளவு வருஷமாச்சு என்று விஜய் இடம் நெகிழ்ந்து பேசினேன். மேலும் வாரிசு படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் மிகவும் பிரமாதமாக நடித்துள்ளார். முதல் முதலாக இந்த மேடையில் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள போகிறேன்.

வாரிசு படத்தில் நடித்ததன் மூலம் விஜயின் ரசிகனாகவே மாறிவிட்டேன் என்று பிரகாஷ்ராஜ் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். இவர் இப்படி கூறியுள்ளதால் வாரிசு படத்தின் மீதான எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களை தாண்டி அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.