லவ் டுடே பிரதீப் போல் மாஸ் காட்டும் இளம் ஹீரோ.. பெட்டியோடு கதவை தட்டும் தயாரிப்பாளர்கள்

ஜெயம் ரவியின் கோமாளி படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். இவர் கடந்த ஆண்டு இறுதியில் ஹீரோவாக நடித்து இயக்கிய லவ் டுடே திரைப்படம் உலக அளவில் நல்ல வரவேற்பு பெற்றது. 

வெறும் 5 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட  இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. லவ் டுடே படத்திற்குப் பிறகு பிரதீப்புக்கு நேரம் நன்றாக இருக்கிறது. அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார். இயக்கத்தையும் தாண்டி நடிப்பில் பிச்சு உதறுகிறார். 

இவரை போலவே சின்ன பட்ஜெட் படத்தில் நடித்த பெரிய லாபம் பார்த்து கொடுத்த இளம் ஹீரோவுக்கு இப்பொழுது வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. பல தயாரிப்பாளர்கள் பெட்டியோடு கதவை தட்டி வருகின்றனர்.

சமீபத்தில் சின்ன பட்ஜெட்டில்  வெளியாகி பெத்த லாபம் பார்த்த டாடா படத்தின் கவின் தான் இப்பொழுது  பிரதீப்பை போல கலக்கிக் கொண்டிருக்கிறார். வரிசையாக கதைகள் வந்து குவிகிறது. இவரை ஹீரோவாக வைத்து படம் எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் அவருடைய வீட்டு வாசலில் வரிசை கட்டி காத்திருக்கின்றனர்.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்று கவினும் வரிசையாக அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி கொண்டிருக்கிறார். இவருடைய இந்த வளர்ச்சியை பார்க்கும் போது, சின்னத் திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு என்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயனை போல் கவினும் வளர்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று திரை பிரபலங்கள் கணிக்கின்றனர்.

அத்துடன் சின்ன பட்ஜெட்டில் எந்தவித பிரமாண்டமும் இல்லாமல் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிக்காட்டிய டாடா படத்தின் கதாநாயகன் கவின், லவ் டுடே பிரதீப் ரங்க நாதனை போல் தற்சமயம் கோலிவுட்டில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவரின் அடுத்த பட அப்டேட்டும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.