உலக அளவில் கவனம் பெற்ற தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன். இவருடைய தமிழ் புதினங்கள், நாவல்கள், சிறுகதைகள் என அனைத்தும் வாசகர்களை கவர்ந்துள்ளது. மேலும் எண்ணற்ற கட்டுரைகளையும் பெருமாள் முருகன் எழுதியுள்ளார். எங்கு புத்தக கண்காட்சி நடந்தாலும் முதல் ஆளாக இவர் கலந்து கொள்வார்.
இந்நிலையில் பெருமாள் முருகனின் சிறுகதையை இளம் இயக்குனர் ஒருவர் படமாக எடுக்க உள்ளாராம். அதாவது விபின் ராதாகிருஷ்ணன் என்பவர் பெருமாள் முருகனின் சிறுகதைகளில் கோடி துணி என்ற சிறுகதையை படமாக எடுக்க இருக்கிறார். இதற்கான வேலையில் இவர் தற்போது முழுவீச்சாக ஏங்கி உள்ளாராம்.
இந்த படத்தை நடிகரும், பாடகருமான ஃபிரோஸ் ரஹீம் மற்றும் ஒளிப்பதிவாளர் அஞ்ஜோய் சாமுவேல் ஆகியோர் சேர்ந்து என்ஜாய் ஃபிலிம் சார்பில் இந்த படத்தை தயாரிக்கின்றனர். மேலும் கோடி துணி சிறுகதையின் புது விளக்கமாக இந்த படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அஞ்ஜோய் சாமுவேல் கோடி துணி சிறுகதை படத்திற்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகிறார். மேலும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் பிப்ரவரி முதல் வாரத்திலேயே தொடங்கப்பட்டது. மேலும் படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் பற்றிய விபரங்கள் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும். அது மட்டுமின்றி படத்தின் டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தங்களுடைய முதல் படமே பெருமாள் முருகனின் சிறுகதையை படமாக்குவது மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளனர்.
இப்போது பெரும்பாலும் நாவல் மற்றும் சிறுகதையை படமாக இயக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. இப்போது பெருமாள் முருகனின் சிறுகதையை படமாக்குவதை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
