Sivaji: சிவாஜிக்கு பிறகு பிரபு ஹீரோவாக ஜெயித்தார். அவருடைய மகன் விக்ரம் பிரபு வளர்ந்து வரும் ஹீரோக்கள் பட்டியலில் தான் இருக்கிறார்.
தற்போது சிவாஜி குடும்பத்திலிருந்து மற்றொரு ஹீரோவும் தயாராகி விட்டார். அதன்படி பிரபுவின் அண்ணன் ராம்குமாரின் இளைய மகன் தர்ஷன் தற்போது ஹீரோவாகி இருக்கிறார்.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தான் இப்படத்தை தயாரித்துள்ளது. புதுமுக இயக்குனர் பாலா இயக்கத்தில் கங்கை அமரன், ரோஜா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
சிவாஜி குடும்பத்திலிருந்து வரும் அடுத்த ஹீரோ
விவசாய சம்பந்தப்பட்ட இந்த கதையில் படவா படத்தில் நடித்திருந்த ஷ்ரித்தா ராவ் ஹீரோயினாக நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் ஏற்கனவே விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி விஷ்ணு விஷாலின் இரண்டு வானம் ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.
அதில் இந்த படத்தை மட்டும் வெளியில் சொல்லாமல் சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்கின்றனர். ஏனென்றால் சிவாஜி பேரனுக்கு ஒரு மாஸ் இன்ட்ரோ கொடுத்து அறிமுகப்படுத்த அவர்கள் திட்டமிட்டு உள்ளார்களாம்.
ஆக மொத்தம் சிவாஜி குடும்பத்தில் இருந்து இன்னொரு ஹண்ட்ஸம் ஹீரோ வந்துவிட்டார். தாத்தா சித்தப்பா அளவுக்கு ஜொலிப்பாரா என பார்ப்போம்.