தளபதி 68 கதையை விட மிகப்பெரிய சஸ்பென்ஸ் இருக்கு.. கங்கை அமரன் கூறிய ட்விஸ்ட் இது தான்!

Vijay in Thalapathy 68: லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது. இப்படம் விஜய்யின் மற்றைய படங்களை விட ரொம்பவே எதிர்பார்ப்பை ரசிகர்களிடமிருந்து அதிகரித்து இருக்கிறது. அதற்கு காரணம் லோகேஷின் வித்தியாசமான கதையும், பல சுவாரஸ்யமான ட்விஸ்ட்களும் இருப்பதால் தான்.

அந்த வகையில் லியோ திரைப்படம் விஜய் மற்றும் லோகேஷ் இவர்கள் இருவருக்கும் மிகப் பிரம்மாண்டமான வெற்றியை கொடுக்கப் போகிறது. இதனைத் தொடர்ந்து விஜய் நடிக்க இருக்கும் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கப் போகிறார் என்ற அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார்கள்.

அத்துடன் விஜய் படத்திற்கு நீண்ட வருடம் கழித்து யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க போகிறார். இப்படி தளபதி 68 படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இதில் அடுத்து சுவாரஸ்யமான விஷயங்களை வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன் பத்திரிக்கையாளர்களிடம் கூறி இருக்கிறார்.

அதாவது இப்படத்தில் விஜய் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்த உடனே என்னிடம் வெங்கட் பிரபு கூறினார். அத்துடன் இக்கதையை பற்றி சில விஷயங்களையும் என்னிடம் அவர் கூறினார். அதைக் கேட்டதும் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அது என்ன விஷயங்கள் என்று நான் தற்போது பத்திரிக்கையாளர்களிடம் கூற முடியாது.

ஆனால் கண்டிப்பாக இந்த படம் வெற்றி அடையும் என்பதை மட்டும் நான் உறுதியாக கூற முடியும் என்று சொல்லி இருக்கிறார். மேலும் இப்படத்தில் மூன்று மற்றும் நான்கு பாடல்கள் இருக்கிறதாகவும், இந்த படத்தில் உள்ள ஆர்டிஸ்ட்கள் யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படும் அளவிற்கு இருக்கும் என்று மறைமுகமான விஷயங்களை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.

அந்த வகையில் தளபதி 68 படத்தில் நாம் அனைவரும் எதிர்பார்க்காத மாதிரி நடிக்கப் போகிறது யார் என்றால் அஜித். அதாவது முதலில் விஜய்யிடம் கதை சொல்லும் போதே கேமியோ தோற்றத்தில் அஜித் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டார் என்ற விஷயத்தை சொல்லிதான் சம்மதமே வாங்கி இருக்கிறார். அதன் பிறகு தான் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பதற்கு சம்மதம் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் தளபதி 68 படத்தில் விஜய் மற்றும் அஜித் காம்போ கண்டிப்பாக இருக்கிறது என்பது உறுதியாகியுள்ளது.