மாஸ் ஹீரோக்களான விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் பல வருடங்களுக்குப் பிறகு இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் விஜய்யின் வாரிசு படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அதாவது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வாரிசு படம் உருவாகியுள்ளது. ஆனால் முழுக்க முழுக்க தெலுங்கில் எடுக்கப்பட்ட படம் மட்டுமே தான் பண்டிகை காலங்களில் அங்கு வெளியிடப்படும் என்ற சட்டம் உள்ளது. ஆகையால் வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்பு இருக்கிறது.
இந்நிலையில் அஜித்தின் துணிவு படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இதனால் துணிவு படத்திற்கு தான் தமிழ்நாட்டில் அதிகப்படியான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் துணிவு படத்தை விட கிட்டத்தட்ட 100 திரையரங்குகளுக்கு கம்மியாக வாரிசு படத்திற்கு தியேட்டர் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகையால் உள்ளூரில் தியேட்டர் இல்லாத காரணத்தினால் வெளிநாடுகளில் விஜய் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். எப்போதுமே விஜய்க்கு வெளிநாட்டில் ரசிகர் கூட்டம் அதிகம்.
இதனால் விஜய் படங்கள் தமிழ்நாட்டை போலவே மற்ற நாடுகளிலும் வசூல் வேட்டையாடும். ஆகையால் தற்போது வெளிநாடுகளில் வாரிசு படத்தை 35 கோடி கொடுத்து வாங்கி உள்ளனர். ஆனால் இதற்கு நேர் எதிராக துணிவு படம் 13 கோடி மட்டுமே வியாபாரமாகி உள்ளது.
வாரிசு படத்தை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு குறைவாக துணிவு படம் பெற்றதற்கான காரணம் அஜித்தின் முந்தைய படமான வலிமை படத்தால் வெளிநாடுகளில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக துணிவு படம் மிக கம்மியான விலைக்கு போய் உள்ளது.