This Week Ott Release Movies: இந்த ஆண்டின் கிளைமாக்ஸுக்கு நாம் வந்து விட்டோம். புத்தாண்டை வரவேற்க தற்போது அனைவரும் தயாராகிக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் வருடத்தின் இறுதி வாரத்தில் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன என்பதை இங்கு காண்போம்.
அதன்படி இந்த மாத தொடக்கத்தில் வெளிவந்த நயன்தாராவின் அன்னபூரணி மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில் வசூலும் சுமாராகத்தான் இருந்தது. அதைத்தொடர்ந்து மிக்ஜாம் புயலின் தாக்கமும் பின்னடைவாக அமைந்தது.
இப்படி தியேட்டரில் கலை இழந்து போன அன்னபூரணி நாளை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. அதேபோல் அன்னபூரணி வெளியான நாளில் ரிலீசான பார்க்கிங் படமும் மீண்டும் ஓடிடியில் நயன்தாராவுடன் மோத வருகிறது.
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வரும் 30ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. தியேட்டரில் இப்படத்தை பார்க்க தவறிய ரசிகர்கள் தற்போது ஓடிடி ரிலீசுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து சல்மான் கான் நடிப்பில் வெளியான டைகர் 3 அமேசான் ப்ரைம் தளத்தில் டிசம்பர் 31ம் தேதி வெளியாகிறது. மேலும் விது வினோத் சோப்ராவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 12th Fail தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ் பெற்றது.
பலரின் கவனத்தை திருப்பிய இப்படம் வரும் 29ம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. இதைத்தொடர்ந்து விஜய் டிவி புகழ் ராஜலட்சுமி, ராதாரவி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்திருந்த லைசென்ஸ் கடந்த நவம்பர் மாதம் வெளியானது.
கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் தற்போது ஆகா தமிழ் ஓடிடியில் வெளியாக உள்ளது. இப்படியாக இந்த 5 படங்களும் இந்த வருட இறுதி ஸ்பெஷல் ஆக வெளிவர இருக்கிறது. இதில் எந்த படங்கள் அதிக பார்வையாளர்களை கவரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.