Ilaiyaraaja: இளையராஜாவின் பாடல்கள் என்றாலே நாள் முழுக்க கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஆனால் இப்போது அவர் பாட்டை வீட்டில் சும்மா பாடினால் கூட ராயல்டி கேட்டு வந்து விடுவாரோ என நினைக்க வைத்து விட்டார்.
அந்த அளவுக்கு ராஜாவின் ராயல்டி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பழைய பாடல்களுக்கு இன்னும் மவுசு இருப்பதை தெரிந்து கொண்ட இயக்குனர்களும் ராஜா பாடலை தான் படத்தில் பயன்படுத்துகின்றனர்.
சமீபத்தில் வெளிவந்த குட் பேட் அக்லி வரை இந்த சர்ச்சை இருக்கிறது. அதனால் எதற்கு வம்பு என இப்போது எவர்கிரீன் இசையமைப்பாளர்கள் பக்கம் காத்து திரும்பி இருக்கிறது.
ராஜாவின் ராயல்டி
அதாவது இசையமைப்பாளர் தேவா ஒரு பேட்டியில் என் பாடல்களை தாராளமாக பயன்படுத்தலாம். அதற்காக காசு எல்லாம் கேட்க மாட்டேன். என் பாடல் இப்போதும் ரசிக்கப்படுவது எனக்கு பெருமை தானே என சொல்லி இருந்தார்.
அதனால் இனி வரும் படங்களில் இவருடைய பாடல்களை நாம் எதிர்பார்க்கலாம். இவர் மட்டுமல்லாமல் வித்யாசாகர், சிற்பி, எஸ் ஏ ராஜ்குமார், பரத்வாஜ் ஆகியோரின் பாடல்கள் கூட மீண்டும் ட்ரெண்டிங்கில் இடம் பிடிக்க போகிறது.
சோசியல் மீடியாவில் கூட இசைஞானி தான் காசு கேட்கிறார். அவருக்கு பதிலா எத்தனயோ இசையமைப்பாளர்களின் பாடல்கள் இருக்கு அதை மீண்டும் கொண்டு வாங்க.
லோகேஷ், ஆதிக் அடுத்த படத்துக்கு தேவா பாடல் யூஸ் பண்ணுங்க என சிலர் வெளிப்படையாகவே கோரிக்கை வைக்கின்றனர். அப்படின்னா இப்ப இருக்கும் இசையமைப்பாளர்கள் என்னதான் பண்றாங்க.
இந்த மாதிரி கேள்விகளும் அனைவர் மனதிலும் உள்ளது. தற்போது வரும் பாடல்கள் கேட்கும் ரகமாக இருந்தாலும் பழைய பாடல் இன்னும் பசுமையாக இருக்கிறது.
அது படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருக்கிறது. அதனாலயே இப்போது இருக்கும் இயக்குனர்கள் பழைய பாடல்கள் இடம் பெற வேண்டும் என இசையமைப்பாளர்களிடம் கூறுகின்றனர்.