Tourist Family: அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் ஜோடியாக சிம்ரன் நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி ரெட்ரோ படத்திற்கு போட்டியாக வெளியாகி உள்ளது. ஏற்கனவே படத்தை பார்த்த பிரபலங்கள் ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளி இருந்தனர்.
அதைத்தொடர்ந்து தற்போது படத்தை பார்த்த ஆடியன்ஸ் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இலங்கையில் இருந்து சென்னைக்கு வரும் சசிகுமாரின் குடும்பம் ஒரு பிரச்சனையில் சிக்குகிறது.
அதன் பிறகு அவர்களுக்கு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை. இதை இயக்குனர் திரைக்கதை வடிவில் கொடுத்திருக்கும் விதம்தான் இந்த பாராட்டுகளுக்கு காரணமாக இருக்கிறது.
இப்படி எல்லாரும் கொண்டாடும் அளவுக்கு படத்தில் என்ன தான் இருக்கு என்பதற்கான 5 காரணங்களை பற்றி எங்கு காண்போம். முதலாவதாக படத்தில் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
அதில் சசிகுமார் வழக்கம்போல இப்படி ஒரு நல்லவரா என கேட்க வைத்திருக்கிறார். அயோத்தி படத்திற்கு பிறகு ஒரு நிறைவான கதாபாத்திரத்தில் அவரை பார்க்கிறோம்.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை கொண்டாடும் ஆடியன்ஸ்
அவருக்கு அடுத்ததாக சிம்ரன் அழகான குடும்ப தலைவியாக அனைவரையும் கவருகிறார். ஆனால் இவர்களை ஓவர் டேக் செய்யும் அளவுக்கு இருக்கிறது குட்டி பையனின் நடிப்பு.
இரண்டாவது பையனாக வரும் கமலேஷ் அசத்தி இருக்கிறார். அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் சரவெடியாக இருக்கிறது. நிச்சயம் இவருக்கு இனி அடுத்தடுத்த வாய்ப்புகள் குவியும்.
மேலும் படத்தில் ரொம்பவும் சோகத்தை காட்டாமல் கலகலப்பாகவும் அட நம்ம வாழ்க்கையில நடக்குற மாதிரியே இருக்கே என கதையோடு ஆடியன்ஸ் ஒன்றி போகும் படியும் எடுத்துள்ளார் இயக்குனர்.
அதேபோல் வசனங்களும் சிறப்பாக இருக்கிறது. கிளைமேக்ஸ் எதிர்பாராத ட்விஸ்ட். அதற்கும் மேலாக இயக்குனரும் அழகான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பது சர்ப்ரைஸ்.
தமிழ் சினிமாவுக்கு இளம் மற்றும் திறமையான இயக்குனர் மட்டுமல்ல ஒரு நடிகரும் கிடைத்துவிட்டார். ஆக மொத்தம் மாசத்துக்கு ஒரு தடவையாவது இந்த மாதிரி படங்கள் தமிழில் வரவேண்டும் என ஏங்க வைத்திருக்கிறது டூரிஸ்ட் ஃபேமிலி.
ரெட்ரோவுடன் மோதுவதால் படம் தல தப்புமா என்ற பேச்சும் இருந்தது. ஆனால் அது அத்தனையும் தவிடு பொடியாக்கி குடும்பங்களை கொண்டாட வைத்திருக்கிறது இப்படம்.