TN Top 3 High Collection Movies: இந்த வருடம் கோலிவுட்டில் டாப் ஹீரோக்கள் அத்தனை பேரின் படங்களும் மாதத்திற்கு ஒன்றாக வெளியாகிறது. ஜனவரி மாதத்தில் இருந்து தள்ளிப்போன விடாமுயற்சி பிப்ரவரி மாதம் வெளியானது.
அதை அடுத்து வீர தீர சூரன், குட் பேட் அக்லி ஆகிய படங்கள் கவனம் பெற்றது. இதன் தொடர்ச்சியாக ரெட்ரோ, தக் லைஃப், கூலி, குபேரா, மதராசி, இட்லி கடை என அடுத்தடுத்த படங்கள் வெளிவர இருக்கிறது.
இதில் எந்த படம் ஆயிரம் கோடியை தொடும் என்ற ஆவலும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் வெளியான குட் பேட் அக்லி தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்துள்ளது.
கில்லி மாதிரி சொல்லி அடித்த தளபதி
ஆனால் இதையும் தாண்டி தமிழ்நாட்டில் கலக்கிய படங்களும் உண்டு. அதன்படி நம் தமிழகத்தில் 200 கோடிகளை தாண்டி வசூல் பெற்ற டாப் 3 படங்கள் பற்றி இங்கு காண்போம்.
அதில் விஜய், வெங்கட் பிரபு கூட்டணியில் வெளிவந்த கோட் தமிழகத்தில் 219.50 கோடிகளை வசூலித்து 3ம் இடத்தில் உள்ளது.
அடுத்ததாக மணிரத்தினம் இயக்கத்தில் வரலாற்று படமாக உருவான பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று 222 கோடிகளை வசூலித்து 2ம் இடத்தை பிடித்துள்ளது.
முதல் இடத்தை விஜய், லோகேஷ் கூட்டணியின் லியோ படம் பிடித்துள்ளது. படத்திற்கு சில கலவையான விமர்சனங்கள் வந்த போதிலும் 231.50 கோடிகள் வரை தமிழகத்தில் வசூலித்து இருக்கிறது.
இந்த சாதனையை இனி வெளியாகும் படங்கள் முறியடிக்குமா என பார்ப்போம். அதில் கூலி, தக் லைஃப் இரண்டுக்கும் இடையே பெரும் போட்டி உள்ளது.