எதிர்மறை ரசிகர்கள் இல்லாத 2 ஹீரோக்கள்.. உச்சம் தொட்டும் எளிமை

பொதுவாக சினிமாவில் பிரபல ஹீரோவாக இருக்கும் நடிகர்களுக்கு அனைவரும் ரசிகர்களா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு சிலர் அவர்களை விரும்புவார்கள், சிலர் விரும்பமாட்டார்கள். அவர்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் சில எதிர்மறை விமர்சனங்களும் வந்து கொண்டுதான் இருக்கும்.

ஆனால் இதுவரை சினிமாவில் அந்த மாதிரி எந்த எதிர்மறை விமர்சனங்களும் இல்லாமல் அனைவருக்கும் பிடித்த ஹீரோவாக இரண்டு பேர் இருந்திருக்கிறார்கள். அவர்கள் வேறு யாருமல்ல ஜெய்சங்கர் மற்றும் விஜயகாந்த் இவர்கள்தான்.

இவர்கள் இருவருக்கும் அனைத்து தரப்பு ரசிகர்களும் இருந்தார்கள். இவர்கள் இருவரும் ஒரு சிறந்த நடிகர்களாக உச்சம் தொட்ட போதிலும் இவர்களுக்கு எதிராக எந்த ஒரு எதிர்மறை விமர்சனங்களும் எழுந்தது கிடையாது. அதற்கு முக்கிய காரணம் இவர்களுடைய சொந்த வாழ்விலும் சரி திரை வாழ்விலும் சரி இவர்கள் காட்டும் எளிமை தான்.

சில நடிகர்களை எல்லாம் பார்ப்பது என்பது ரொம்பவும் அரிது. ஆனால் இவர்கள் இருவரையும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். பிரபல நடிகர்களாக கொடிகட்டி பறக்கும் போது இவர்களை அவருடைய ரசிகர்கள் எப்போது வேண்டுமானாலும் சந்திப்பார்களாம்.

அதுமட்டுமல்லாமல் ரசிகர்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்வார்களாம். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது, பேசுவது என்று மற்ற நடிகர்களிடம் இருந்து இவர்கள் வித்தியாசமாக இருந்திருக்கிறார்கள். ஒருமுறை விஜயகாந்த் கட்சி பணியாக வெளியில் சென்ற பொழுது, சாப்பிடுவதற்கு இடம் கிடைக்காமல் ஒரு மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்ட புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆனது.

அந்த அளவுக்கு அவர் மிகவும் எளிமையானவர். அதோடு மிகவும் கண்ணியமாகவும் நடந்து கொள்ளக் கூடியவர். சுருக்கமாக சொன்னால் இவர்கள் இருவரும் ஒரு ஜென்டில்மேனாக இருந்திருக்கிறார்கள்.