Vijaysethupathi : தமிழ் சினிமா ரசிகர்கள் இன்று மக்கள் செல்வன் என்று தலையில் வைத்துக் கொண்டாடும் ஒரே நாயகன் விஜய் சேதுபதி. சினிமா பின்புலம் இல்லாமல் இன்று சினிமாவில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஹீரோ விஜய் சேதுபதி.
ஒரு சில நடிகர்கள் சினிமாவில் முக அழகை வைத்து மட்டுமே ஃபேமஸ் ஆகிறார்கள். அந்த வகையில் விஜய் சேதுபதி தன் திறமை மற்றும் குரல் வளர்த்தால் மக்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
இவர் பேசும் பேச்சைக் கேட்பதற்கே மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பிக் பாஸ் சீசன் 8-ல் விஜய் சேதுபதி தலைமை தாங்குவார் என்று யாரும் எதிர்பாராத ஒன்றுதான். தன் ஆளுமை வளர்த்தால் மட்டுமே அந்த இடத்தை தக்க வைத்தார்.
கடந்த 25 ஜூலை, விஜய் சேதுபதியின் மற்றும் நித்யா மேனன் நடிப்பில் தலைவன் தலைவி திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது. இது என்ன சாதாரணமான குடும்ப கதை தான் என்று அனைவரும் ஒதுக்கிய நேரத்தில், படத்தைப் பார்த்து முடித்தவர்கள் கொடுத்த ரிவ்யூ தான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
இந்நிலையில் விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் பேசியிருப்பது ட்ரெண்டாகி வருகிறது. ” திருமணத்திற்கு முன்பு நாம் வேலை செய்யும் இடத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால் தூக்கிப் போட்டு வந்துவிடலாம். ஆனால் திருமணத்திற்குப் பிறகு அந்த மாதிரி பண்ண முடியாது.
எனக்கு ஏதாவது ஆனால் நம்ம பொண்டாட்டி பிள்ளைங்க என்ன பண்ணுவாங்க அப்படின்னு பயம் வர தொடங்கிவிடும்- விஜய் சேதுபதி” தலைவன் தலைவி திரைப்படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது விஜய் சேதுபதி பேட்டி கொடுத்துள்ளது வைரலாகி வருகிறது.