Jailer Movie First Review: ஜெயிலர் படத்தின் ரிலீஸ் நாள் நெருங்க நெருங்க சோசியல் மீடியா முழுவதும் படம் பற்றிய பேச்சு தான் அதிகமாகி கொண்டு இருக்கிறது. அதிலும் நேற்று நடந்த இசை வெளியீட்டு விழா ஒட்டுமொத்த மீடியாவின் கவனத்தையும் ஈர்த்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த அளவுக்கு பல சுவாரசியங்கள் அந்த மேடையில் நடந்தது. இந்நிலையில் ஜெயிலர் படத்தில் இதுவரை நாம் பார்க்காத ரஜினியை பார்க்கலாம் என்று பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார். ஏற்கனவே சென்சார் போர்டு அதிகாரிகள் படத்தை பார்த்துவிட்டு ரஜினியின் நடிப்பை பாராட்டி இருந்தார்கள்.
அதைத்தொடர்ந்து இப்போது பயில்வானும் படத்தில் இடம்பெற்றிருக்கும் சில விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார். அதாவது நெல்சன் படங்கள் அனைத்துமே டார்க் காமெடி பாணியில் தான் இருக்கும். அதேபோன்று தான் இப்படத்திலும் தலைவர் டார்க் காமெடியில் அதகளம் பண்ணியிருக்கிறாராம்.
மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள பஞ்ச் டயலாக்குகள், வசனங்கள் என ஒவ்வொன்றும் குத்தீட்டி போல் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதன் மூலம் ரஜினி தன்னுடைய வேட்டைக்கு தயாராகி விட்டதாகவும் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.
அந்த வகையில் இதுதான் ஜெயிலர் படத்திற்கு கிடைத்த முதல் விமர்சனமாக இருக்கிறது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. அதுவே படத்தின் மீதான உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் பயில்வானும் தன் பேச்சின் மூலம் அதை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறார். அந்த வகையில் அண்ணாத்த படத்திற்கு பிறகு சிறு பிரேக் எடுத்துக்கொண்டு வரும் தலைவரை முத்துவேல் பாண்டியனாக திரையில் பார்த்து கொண்டாடுவதற்கு அவருடைய ரசிகர்கள் தற்போது ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.