Retro-Tourist Family: வரும் மே 1ம் தேதி சூர்யாவின் ரெட்ரோ படம் வெளியாகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல பிரபலங்கள் இதில் நடித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாகவே இதன் பிரமோஷன் நடந்து வருகிறது. சூர்யாவும் சென்னை, ஹைதராபாத் என ரசிகர்களை சந்தித்து பிரமோஷன் செய்து வருகிறார்.
அதே நாளில் இப்படத்துடன் சசிகுமார், சிம்ரன் நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படமும் வெளியாகிறது. இரு படங்களும் வெவ்வேறு கதை அம்சம் கொண்டது.
ரெட்ரோவுடன் மோதியாக வேண்டிய கட்டாயம்
அதனாலேயே இரண்டிற்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க சூர்யா படத்துடன் சசிகுமார் மோதுகிறாரே என்ற ஒரு கேள்வி பட அறிவிப்பு வந்த நாளிலிருந்து இருக்கிறது.
அதற்கு தற்போது தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது படத்தை ஒரு பெரிய நிறுவனம் வாங்கியிருக்கிறார்கள்.
அவர்கள் மே இறுதியில் படம் டிஜிட்டலுக்கு வந்தாக வேண்டும். அப்படித்தான் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது என்று சொன்னார்கள். அதனால்தான் வேறு வழியில்லாமல் மே ஒன்றாம் தேதி படத்தை வெளியிடுகிறோம்.
மற்றபடி போட்டி போட வேண்டும் என்ற எண்ணம் இல்லை ரெட்ரோ மிகப்பெரும் ப்ராஜெக்ட். நாங்களும் ஒரு படம் எடுத்திருக்கிறோம் அவ்வளவுதான் என்று கூறியுள்ளார்.
அது மட்டும் இன்றி இப்போது படம் எந்த தேதியில் ரிலீஸ் ஆக வேண்டும் என்பதை கூட ஓடிடி நிறுவனங்கள் தான் முடிவு செய்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதுதான் சமீப காலமாக நடந்து வருகிறது. ஒரு படம் எப்போது ரிலீஸ் ஆக வேண்டும் என்பதை டிஜிட்டல் நிறுவனங்கள் தான் முடிவு செய்கிறது. அதனாலயே பல படங்கள் வேறு வழியில்லாமல் போட்டிக்கு ஆளாகும் நிலையும் உள்ளது.